காந்தருவ தத்தையார் இலம்பகம் |
357 |
|
வியலாத இடையினையுடைய பாவையே!; அம்மனை! - அன்னையே!; திருமணி வீணைக் குன்றத்து இழிந்த தீ பாலை நீத்தத்து - அழகிய மணியழுத்திய மகரயாழாகிய குன்றில் இருந்து பெருகிய இனி பாலைப் பண்ணாகிய வெள்ளத்திலே; அருமுடி அரசர் ஆழ்வர் - அரிய முடிமன்னர் அமிழ்வர்; அறிவல் என்றாள் - யான் அறிவேன் என்று வீணாபதி விளம்பினாள்.
|
|
(வி - ம்.) புரி - முத்துவடம். பாலையாவன : செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை என ஏழு. அம்மனை - தாய்; 'அன்னை என்னை என்றலும் உளவே, தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும், தோன்றா மரபின என்மனார் புலவர்' (தொல்-பொருளியல்-52) என்பது விதி.
|
( 127 ) |
620 |
மண்ணிட மலிர வெங்கு |
|
மாந்தரும் வந்து தொக்கா |
|
ரொண்ணிற வுரோணி யூர்ந்த |
|
வொளிமதி யொண்பொ னாட்சித் |
|
தெண்ணிற விசும்பி னின்ற |
|
தெளிமதி முகத்து நங்கை |
|
கண்ணிய வீணை வாட்போர்க் |
|
கலாமின்று காண்டு மென்றே. |
|
(இ - ள்.) மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார் - நிலமெங்கும் நிறைய மக்களெல்லோரும் வந்து குழுமினர்; ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளிமதி ஒண் பொன் ஆட்சி - ஒளியும் நிறமும் உடைய உரோகிணி கூடிய திங்களையுடைய வியாழக் கிழமையிலே; தௌ்நிற விசும்பில் நின்ற தெளி மதி முகத்து நங்கை - தெளிந்த நிறமுடைய வானில் உலவும் தெளிந்த மதிபோலும் முகமுடைய தத்தையின்; கண்ணிய வீணை வாள் போர்க்கலாம் இன்று காண்டும் என்று - உலகம் மதித்த யாழாகிய வாட்போரின் மாறுபாட்டை இன்று காண்போம் என்று,
|
|
(வி - ம்.) 'ஈண்டி' என்பது (ஈண்டித் தொக்கார் என) பாடமாயின் 'தம்மில் திரண்டு' என்க. இச் செய்யுள் குளகம்.
|
|
மலிர - நிறைய. உரோணி - உரோகிணி. பொன் - வியாழன். ஆட்சி - கிழமை. கலாம் - கலகம்.
|
( 128 ) |
621 |
பசுங்கதிர்க் கடவுள் யோகம் |
|
பழிப்பற நுனித்து வல்லான் |
|
விசும்பிவர் கடவு ளொப்பான் |
|
விரிச்சிக னறிந்து கூற |
|