காந்தருவ தத்தையார் இலம்பகம் |
358 |
|
621 |
வசும்புதே னலங்க லைம்பா |
|
லரிவையொ டாய்ந்து நாய்கன் |
|
விசும்புபோன் மாந்த ரார |
|
விழுநிதி சிதறி னானே. |
|
(இ - ள்.) பசுங் கதிர்க் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான் - சந்திராபரணம் என்னும் நூலிற் குற்றமறக் கூர்ந்தறிந்து வல்லவன், விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகன் அறிந்துகூற - வானத்தில் இயங்கும் வியாழனைப் போன்றவனாகிய கணி அறிந்து சொல்ல; அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையொடு நாய்கன் ஆய்ந்து - இடையறாது துளிக்குந்தேன்பொருந்திய மாலையணிந்த கூந்தலையுடைய பதுமையுடன் நாய்கன் ஆராய்ந்து; விசும்பு போல் மாந்தர் ஆர விழுநிதி சிதறினான் - முகிலைப்போல, மக்கள் மனமார, நன்னிதியை வழங்கினான்.
|
|
(வி - ம்.) விரிச்சிகன் - கணி : காரணப் பெயர்.
|
|
பசுங்கதிர்க் கடவுள் யோகம் என்றது ”சந்திராபரணம்” என்னும் பெயரையுடையதொரு கணித நூலை. நுனித்தல் - கூரிதாகக் கற்றல். விசும்பிவர் கடவுள் என்றது ஈண்டு வியாழனை.
|
( 129 ) |
622 |
வாசநெய் வண்டு மூச |
|
மாந்தளிர் விரல்கள் சேப்பப் |
|
பூசிவெள் ளிலோத்தி ரத்தின் |
|
பூம்பொருக் கரைத்த சாந்தின் |
|
காசறு குவளைக் காம |
|
ரகவிதழ் பயில மட்டித் |
|
தாசறத் திமிர்ந்து மாத |
|
ரணிநலந் திகழ்வித் தாரே. |
|
(இ - ள்.) வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப வாச நெய்பூசி - மெய்யில் வண்டுகள் மொய்க்க, மாந்தளிரனைய விரல்கள் சிவக்க, மணமுற்ற நெய்யைப் பூசி; வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின் - வெள்ளிலோத்திரத்தினது பூவுலர்தலை அரைத்த குழம்பினாலே; காசு அறு குவளைக் காமர் அகவிதழ் பயில மட்டித்து - குற்றமற்ற குவளையின் அழகிய அகவிதழ்த் தடிப்பைப் போலப் பூசி; ஆசு அறத் திமிர்ந்து - குற்றமறத் திமிர்ந்து;மாதர் அணிநலம் திகழ்வித்தார் - மாதர்கள் தத்தையின் அழகு நலம் விளக்கினர்.
|
|
(வி - ம்.) வெள்ளி லோத்திரம் - ஒருவகை மணமலர். ”தேறு வெள்ளி லோத்திரப் பூம் பொருக் கரைத்த கரைத்த சாந்தும்” என்றா
|
|