காந்தருவ தத்தையார் இலம்பகம் |
359 |
|
(விநாயக. திருமண. 121.) பிறரும். பூம்பொருக்காவது - உலர்ந்த பூ. மட்டித்தல் - பூசுதல்.
|
( 130 ) |
623 |
கங்கையின் களிற்றி னுச்சிக் |
|
கதிர்மணிக் குடத்திற் றந்த |
|
மங்கல வாச நன்னீர் |
|
மணிநிறங் கழீஇய தொப்ப |
|
நங்கையை நயப்ப வெல்லாம் |
|
விரையொடு துவருஞ் சோ்த்தி |
|
யங்கர வல்கு லாளை |
|
யாட்டினா ரரம்பை யன்னார். |
|
(இ - ள்.) அரம்பை அன்னார் - வான மங்கையரனையார்; மணிநிறம் கழீஇயது ஒப்ப - மணியை நிறம்பெறச் சாணை பிடித்தாற் போல; நங்கையை நயப்ப எல்லாம் - நங்கையை விருப்பூட்டுவனவாகிய ஓமாலிகைகள் எல்லாவற்றையும்; விரையொடு துவரும் சேர்த்தி - விரையையும் துவரையும் கூட்டி; களிற்றின் உச்சிக் கதிர் மணிக்குடத்தில் கங்கையின் தந்த - களிற்றின் உச்சியிலே ஒளிவிடும் மணிக்குடத்தில் கங்கையினின்றுங் கொண்டுவந்த; மங்கல வாச நன்னீர் - மங்கலம் பொருந்திய மணநீரைக் கொண்டு; அங்கு அரவு அல்குலாளை ஆட்டினார் - அங்கே தத்தையைக் குளிப்பாட்டினர்.
|
|
(வி - ம்.) ஓமாலிகைகள் : ”இலவங்கம் பச்சிலைகச் சோலமிருவேரி - மலையிரு வேரி வகுளம் சுரபுன்னை - ஏலந்தக் கோல மதாவரிசி சாதிக்காய் - நாகணமஞ் சட்டி நறும்பிசின் குக்குலு - மாஞ்சிகண்டில் வெண்ணெய் தீம்புநன் னாரி - அடவிக்கச் சோலம் அரத்தை சரளம் - புழுகாரி யக் கொட்டங் கொட்டந் தகரம் - அதிமதுர முத்தக்கா சாய்ந்த விலா மிச்சம் - சயிலேக நாகப்பூச் சண்பக மொட்டென்று - முழுதுணர்ந்ததோரோதிய முப்பத் திரண்டே - விதிவகை ஓமாலிகை.” விரை: ”சந்தனம் அகிலொடு கருப்பூரங் கத்தூரி - குங்குமம் என்றிவை ஐந்தும் விரையே.” துவர்: நாற்பால் மரமா நாவல் திரிபலை - வன்கருங் காலி பத்துந்துவரே.” இம்மேற்கோள் முற்றும் வேறுபாட்டுடன் அடியார்க்கு நல்லாரால் எடுத்துக் காட்டப்படுகிறது; (சிலப்-6 : 76-9 : உரை.)
|
( 131 ) |
624 |
வெண்ணிற மழையின் மின்போல் |
|
வெண்டுகிற் கலாபம் வீக்கிக் |
|
கண்ணிற முலையுந் தோளுஞ் |
|
சந்தனத் தேய்வை கொட்டித் |
|
தெண்ணிறச் சிலம்பு செம்பொற் |
|
கிண்கிணி பாதஞ் சோ்த்திப் |
|
பண்ணிறச் சுரும்பு சூழும் |
|
பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார். |
|