காந்தருவ தத்தையார் இலம்பகம் |
362 |
|
627 |
திருந்திளை யார்கள் கோல |
|
மிந்திர னிருமித் தாற்போற் |
|
திருந்தச்செய் ததற்பி னங்கை |
|
திருவிற்கோர் திலக மொத்தாள். |
|
(இ - ள்.) பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து - பொருந்திய பொன் தூண்கள் நான்கினாற் பொலிவுற்று; நூற்புலவர் செந்நா வருந்தியும் புகழ்தல் ஆகா - நூலறிபுலவர் தம் செவ்விய நாவினால் வருந்தியும் புகழ இயலாத; மரகத மணிசெய் கூடத்து - மரகத மணியாற் செய்த ஒப்பனைக்குரிய கூடத்தே; இளையார்கள் இருந்து - ஒப்பனை மகளிர் இருந்து; இந்திரன் நிருமித்தாற்போற் கோலம் திருந்தச் செய்ததன் பின் - இந்திரன் அமைத்ததுபோல் ஒப்பனையை அழகுறச் செய்த பிறகு; நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள் - தத்தை திருமகளுக்கு இட்டதொரு திலகத்தைப் போன்றாள்.
|
|
(வி - ம்.) நான்கில் - நான்கினால். இளையார்கள் - ஈண்டு ஒப்பனை மகளிர். நிருமித்தல் - படைத்தல். திரு - திருமகள். நங்கை - காந்தருவ தத்தை.
|
( 135 ) |
628 |
மண்கனை முழவம் விம்ம |
|
வரிவளை துவைப்ப வள்வார்க் |
|
கண்கனைந் திடியின் வெம்பிக் |
|
கடலென முரச மார்ப்ப |
|
விண்கனிந் துருகு நீர்மை |
|
வெள்வளைத் தோளி போந்தாள் |
|
பண்கனிந் துருகு நல்யாழ்ப் |
|
படைபொரு துடைக்க லுற்றே. |
|
(இ - ள்.) மண் கனை முழவம் விம்ம - மார்ச்சனையிட்ட முரசு ஒலிக்கவும்; வரிவளை துவைப்ப - சங்குகள் முழங்கவும்; வள்வார் முரசம் கண் கனைந்து இடியின் வெம்பிக் கடல் என ஆர்ப்ப - சிறிய வார்கொண்ட முரசம் கண் ஒலித்து இடியின் வெம்பிக் கடல்போல ஆரவாரிக்க; விண் கனிந்து உருகும் நீர்மை வெள் வளைத் தோளி - வானவரும் நெஞ்சுருகுந் தன்மையுடைய வெள்ளை வளையணிந்த தோளினாள்; பண் கனிந்து உருகும் நல் யாழ்ப் படை பொருது உடைக்கல் உற்றுப் போந்தாள் - பண்முற்றுப் பெறுதலிற் கேட்டோர் நெஞ்சுருகுதற்குக் காரணமான நல் யாழினையுடைய படையையும் பொருது உடைத்தற்கு வந்தாள்.
|
|