காந்தருவ தத்தையார் இலம்பகம் |
363 |
|
(வி - ம்.) மண் - மார்ச்சனை. விண் : ஆகுபெயர், விண்ணும் எனற்பால சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
|
( 136 ) |
629 |
பரந்தொளி யுமிழும் பைம்பொற் |
|
கண்ணடி பதாகை தோட்டி |
|
விரிந்திருண் மேயுஞ் செம்பொன் |
|
விளக்குவெண் முரசு கும்பஞ் |
|
சுரந்தவெண் மதியைச் சூன்று |
|
கதிர்கொண்டு தொகுத்த போலும் |
|
பொருந்துபொற் கதிர்பெய் கற்றை |
|
புணர்கயல் போந்த வன்றே. |
|
(இ - ள்.) பரந்து ஒளி உமிழும் பைம்பொன் கண்ணடி - பரவி ஒளியை வீசும் பொற்கண்ணாடியும்; பதாகை தோட்டி - கொடியும் அங்குசமும்; விரிந்து இருள் மேயும் செம்பொன் விளக்கு - ஒளி பரந்து இருளைக் கெடுக்கும் பொன் விளக்கும்; வெண் முரசு கும்பம் - முரசும் நிறைகுடமும்; சுரந்த வெண்மதியைச் சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும் பொருந்து பொன்கதிர் பெய்கற்றை - அமுதைச் சுரந்த வெள்ளிய திங்களைத் தோண்டிக் கதிர்களை எடுத்துக் கொண்டு சேர்த்த போலும் பொருந்தும் பொற்கதிர்களைப் பெய்கின்ற தொகுதியான கவரியும்; புணர்கயல் - இரட்டைக் கயல்களும்; போந்த - வந்தன.
|
|
(வி - ம்.) இவை அட்டமங்கலங்கள்.
|
|
அட்டமங்கலங்கள் இன்ன வென்பதை 472 - ஆம் செய்யுளின் விளக்கத்தினும் காண்க. கண்ணாடி - கண்ணடி என நின்றது. பதாகை - பெருங்கொடி. மேயும் என்றது, கெடுக்கும் என்பதுபட நின்றது. கும்பம் - குடம்; ஈண்டு நிறைகுடம் என்பதுபட நின்றது.
|
( 137 ) |
630 |
வென்றவ னகலம் பூட்ட |
|
விளங்கொளி மணிசெய் செப்பி |
|
னின்றெரி பசும்பொன் மாலை |
|
போந்தது நெறியிற் பின்ன |
|
ரொன்றிய மணிசெய் நல்யாழ் |
|
போந்தன வுருவ மாலை |
|
தின்றுதே னிசைகள் பாடத் |
|
திருநகர் சுடர வன்றே. |
|
(இ - ள்.) வென்றவன் அகலம் பூட்ட - வென்றவன் மார்பில் அணிய : விளங்கு ஒளி மணிசெய் செப்பின் நின்று எரி பசும்பொன் மாலை நெறியின் போந்தது - விளங்கும் ஒளியை
|
|