காந்தருவ தத்தையார் இலம்பகம் |
364 |
|
உடைய மாணிக்கச் செப்பிலே நின்று ஒளிதரும் பைம்பொன் மாலை வழக்கப்படி வந்தது; பின்னர், ஒன்றிய மணிசெய் நல்யாழ் - பிறகு, ஒன்றிய மாணிக்கங்கள் இழைத்த அழகிய யாழ்கள்; உருவம் மாலைதின்று - தம் உருவத்தை மாலைகள் உள்ளடக்கி; தேன் இசைகள் பாட - அம் மாலைகளில் உள்ள வண்டுகள் இசைபாட; திருநகர் சுடர - நகரம் விளக்கம்உற; போந்தன - வந்தன.
|
|
(வி - ம்.) 'தின்று' என்பதற்குத் 'தேன் மாலையைத் தின்று இசைகள் பாட' என மிகுதியாற் கூறுவாருமுளர். 'தின்று தேன்றிசைகள் பாட' என்றும் பாடம்.
|
|
வென்றவன், யாழ்ப்போரில் தன்னை வென்றவன் என்க. தின்று - தின்னப்பட்டு; மறைக்கப்பட்டு என்றவாறு.
|
( 138 ) |
வேறு
|
|
631 |
ஆரந் துயல்வர வந்துகில் சோர்தர |
|
வீரம் படக்கையை மெய்வழி வீசித் |
|
தேரை நடப்பன போற்குறள் சிந்தினொ |
|
டோரு நடந்தன வொண்டொடி முன்னே. |
|
(இ - ள்.) ஆரம் துயல்வர அம்துகில் சோர்தர - ஆரம் அசையத் துகில் நெகிழா நிற்க; வீரம்பட - வீரம் உண்டாக; கையை மெய்வழி வீசி - கையை விலாப்புடைக்குள்ளே வீசி; தேரை நடப்பனபோல் - தேரைகள் நடப்பனபோல; குறள் சிந்தினொடு - குறளும் சிந்தும்; ஒண்தொடி முன்னே நடந்தன - தத்தைக்கு முன்னே நடந்தன.
|
|
(வி - ம்.) ஓரும் : அசைச் சொல். இரண்டடி உயரம் உள்ளவர்கள் குறளர் : மூன்றடி உயரமுள்ளவர்கள் சிந்தர்.
|
|
”தோளிரண்டும் வீசி யாம் வேண்டேமென்று விலக்கவும் எம் வீழும் காமர் நடக்கும் நடைகாண்” (94 - 31 - 3.) என்றார் மருதக்கலியினும்.
|
( 139 ) |
632 |
வட்டச் சூறையர் வார்முலைக் கச்சினர் |
|
பட்டு வீக்கிய வல்குலர் பல்கணை |
|
விட்ட தூணியர் வில்லினர் வாளின |
|
ரொட்டி யாயிரத் தோரெண்மர் முன்னினார். |
|
(இ - ள்.) வட்டச் சூறையர் - வட்டமான பனிச்சையர்; வார்முலைக் கச்சினர் - வாராற் கட்டிய முலைக் கச்சினர்; பட்டு வீக்கிய அல்குலர் - வெண்பட்டணிந்த அல்குலினர்; பல்கணைவிட்ட தூணியர் வில்லினர் வாளினர் - பல அம்புகள் நிறைந்த
|
|