காந்தருவ தத்தையார் இலம்பகம் |
365 |
|
தூணியும் வில்லும் வாளும் உடையராய்; ஆயிரத்துஓர் எண்மர் - ஆயிரத்தெட்டு மகளிர்; ஒட்டி முன்னினார் - வஞ்சினங் கூறித்தத்தைக்கு முன் போந்தனர்.
|
|
(வி - ம்.) சூறை - சல்லடமும் ஆம்.
|
|
இவர்கள் காவன்மகளிர். ஒட்டி - வஞ்சினங் கூறி. ஆயிரத்தோ ரெண்மர் என்புழி - ஓர்: அசைச்சொல். முன்னுதல் - முற்படச் செல்லுதல்.
|
( 140 ) |
633 |
வம்பு வீக்கி வருமுலை யுட்கரந் |
|
தம்பி னொய்யவ ராணுடைத் தானையர் |
|
பைம்பொற் கேடகம் வாளொடு பற்றுபு |
|
செம்பொற் பாவையைச் சேவித்து முன்னினார். |
|
(இ - ள்.) அம்பின் நொய்யவர் - (ஓடுங்கால்) அம்பினுங் கடிதோடுவர்; வரும்முலை உள் கரந்து வம்பு வீக்கி - வளரும் முலையை உள்ளடக்கிக் கச்சினால் இறுக்கி; ஆண் உடைத் தானையர் - ஆணுடையாக உடுத்த ஆடையினராய்; பைம்பொன் கேடகம் வாளொடு பற்றுபு - புதிய பொற்கேடகத்தையும் வாளையும் பற்றியவராய்; செம்பொற் பாவையைச் சேவித்து முந்தினார் - தத்தையைச் சேவித்து முற்படச் சென்றனர்.
|
|
(வி - ம்.) இங்ஙனஞ் சேவித்தல் மகளிரினியல்பு.
|
|
வம்பு - கச்சு. வருமுலை : வினைத்தொகை. நொய்யவா என்புழி - நொய்மைப் பண்பு விரைவு குறித்து நின்றது. செம்பொற்பாவை என்றது, காந்தருவதத்தையை
|
( 141 ) |
634 |
ஆணை யாணை யகலுமி னீரென |
|
வேணுக் கோலின் மிடைந்தவ ரொற்றலி |
|
னாணை யின்றெம தேயென் றணிநகர் |
|
காணுங் காதலிற் கண்ணெருக் குற்றவே. |
|
(இ - ள்.) ஆணை ஆணை நீர் அகலுமின் என - அரசன் ஆணை! ஆணை!! நீவிர் விலகிச் செல்லுமின் என்று; மிடைந்தவர் வேணுக் கோலின் ஒற்றலின் - நெருங்கியவரை மூங்கிற்கோலினாற் காவலர் தள்ளும்போது; ஆணை இன்று எமதே என்று - ஆணை இன்றைக்கு எங்களுடையதே என்று; அணிநகர் காணும் காதலின் - அழகிய நகரிலுள்ளார் காணவரும் காதலினால்; கண் நெருக்குற்றவே - கண்கள் நெருங்கியுற்றன.
|
|
(வி - ம்.) நகர் - நகரத்து மக்கள்: ஆகு பெயர். வேணு - மூங்கில்.
|
( 142 ) |