பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 366 

635 கண்ணி னோடு பிறந்தது காரிகை
வண்ணங் காண்டற்கன் றோவென்று வைதவர்
விண்ணு மண்ணும் விருந்துசெய் தாலொப்ப
வெண்ணி னெண்ணிட மின்றி நெருங்கினார்.

   (இ - ள்.) அவர் - அந் நகர மக்கள்; கண்ணினோடு பிறந்தது காரிகை வண்ணம் காண்டற்கு அன்றோ என்ற வைது - யாங்கள் கண்ணுடன் பிறந்தது தத்தையின் அழகைக் காண்பதற்கு அன்றோ என்று வைது; விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப - வானும் நிலனும் விருந்து செய்தாற்போல; எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார் - ஆராயின் எள் இடவும் இடம் இன்றி நெருங்கினார்.

 

   (வி - ம்.) [நச்சினார்க்கினியர் 634 -635 ஆகிய இரண்டு செய்யுளையும் ஒரு தொடராக்கி மொழிமாற்றிக் கூறும் பொருள்:

 

   ”காவற் குரியவர்கள் மிடைந்தவரை முற்படவைது, அவர் நீங்காமையின், ஆணை ஆணை அகலுமின் எனக் கூறி ஒற்றுதலால், அவர், விண்ணில் விச்சாதரரும் மண்ணிலுள்ளாரும் எள்ளிட இடம் இன்றி நெருங்கினார், காரிகை வண்ணம் காண்டற் கன்றோ? ஆதலால் விசாரித்துப் பார்க்கின், யாமும் கண்ணினொடு பிறந்தது வண்ணங் காண்டற் காயிருக்குமெனக் கூறிப், பின்னும் எங்கட்கு நீர் விருந்து செய்தாற்போல இன்று எம்முடைய ஆணையே ஆணையாகக் கொண்மின் எனவுங் கூறி நகரிலுள்ளார் காதலாற் காணுங் கண்கள் நெருக்குற்ற வென்க.

 

   காவற்குரியவர்களென்றும் முற்படவென்றும் நீங்காமையின் என்றும் யாமும் என்றும் வண்ணம் காண்டற்காயிருக்கும் என்றும் பின்னும் என்றும் எங்கட்கென்றும் ஆகக் கொண்மின் என்றும் வருவித்துரைக்க.”]

( 143 )

வேறு

 
636 இனஞ்சேரா வாகி விளையோ
  ருயிரின்மே லெண்ணங் கொள்வான்
புனஞ்சோ் கொடிமுல்லை பூம்பவளத்
  துட்புக்குப் பூத்த போலும்
வனஞ்சோ் துவர்ச்செவ்வாய் வாளெயிறுங்
  கண்மலரும் வனைய லாகாக்
கனஞ்சோ் கதிர்முலையுங் கண்டார்கள்
  வீட்டுலகங் காணார் போலும்!

   (இ - ள்.) இனம் சேரா - தம் இனத்துடன் சேராமல்; இளையார் உயிரின்மேல் எண்ணம் கொள்வான் - இளைஞரின் உயிரின்மேற் கருத்துக் கொள்ள விரும்பி; புனம்சேர் கொடி