பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 367 

முல்லை - காட்டிலிருக்கும் கொடிமுல்லைகள்; பூம்பவளத்துள் புக்குப் பூத்தபோலும் - அழகிய பவளத்தினுள்ளே புகுந்து பூத்தனபோல; வனம்சேர் துவர்ச் செவ்வாய் வாள் எயிறும் - அழகுடைய பவளச் செவ்வாயில் ஒளிமிகு முறுவலையும்; கண் மலரும் - கண்களாகிய மலர்களையும்; வனையல் ஆகாக் கனம்சேர் கதிர்முலையும் - செய்ய முடியாத பருத்த ஒளிவிடும் முலைகளையும்; கண்டார்கள் வீட்டு உலகம் காணார்போலும் - பார்த்தவர்கள் வீட்டுலகைக் காண விரும்பார் போலும்!

 

   (வி - ம்.) 'காணார் வீட்டுலகங் கண்டார்' என இயைப்பர் நச்சினார்க்கினியர்.

 

   இனம் என்றது தம்மினத்து மகளிரை என்றவாறு. இளையார் என்றது ஆடவரை. வனம் - அழகு. துவர் - பவளம். வீட்டுலகத்தினும் இவை இன்பமிக்குடையன என்று இவற்றையே விரும்புவர் என்பதுகருத்து

( 144 )
637 மீன்சோ் குழாமனைய மேகலையும்
  வெம்முலையுங் கூற்றங் கூற்ற
மூன்சே ருயிருய்யக் கொண்டோடிப்
  போமின்க ளுரைத்தே மென்று
கான்சோ் கமழ்கோதை காறொடர்ந்து
  கைவிடா தரற்று கின்ற
தேன்சோ் திருவடிமேற் கிண்கிணிபொன்
  னாவதற்கே தக்க தென்பார்.

   (இ - ள்.) மீன்சேர் குழாம் அனைய மேகலையும் வெம்முலையும் கூற்றம்! கூற்றம்!! - விண்மீன்கள் சேர்ந்த திரள் போன்ற மணிகள் கொண்ட மேகலையும் விருப்பூட்டும் முலையும் கூற்றம்! கூற்றம்!!; ஊன்சேர் உயிர் உய்யக் கொண்டு ஓடிப்போமின்கள் - ஊனைச் சேர்ந்த உயிர் பிழைக்கக் கொண்டு ஓடிப்போமின்கள்; உரைத்தேம் என்று - கூறினோம் என்று, கான்சேர் கமழ்கோதை - மணங்கலந்து கமழ்கின்ற மாலைபோல்வாளின்; கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற - காலைப் பற்றி நீங்காமல் அரற்றுதல் செய்கின்ற; தேன் சேர் திருவடிமேல் கிண்கிணி - தேனினம் மலரென்று கருதிச் சேரும் அழகிய அடிகளின்மேல் அணிந்த கிண்கிணி: பொன் ஆவதற்குத் தக்கதே என்பார் - பொன்னாவதற்குத் தகுதியானதே என்பார்கள்.

 

   (வி - ம்.) எச்சரிக்கை செய்வதனாற் பொன்னெனப் புகழ்ந்தனர்.

 

   நச்சினார்க்கினியர் மேகலையும் கிண்கிணியும் எனக் கூட்டிப் பொன்னாவதற்குத் தக்கன என்ற பொருள் கூறுவர். கூற்றம் கூற்றம் என்று