| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
368 |
|
|
வெம்முலையையே கூறுவர். மற்றும் பொன்னாவதற்கோ தக்க என ஏகாரத்தை எதிர்மறையாக்குவர். மேகலை அல்குலின் மேலணிவதால் மேகலையும் கண்டார் மனத்தைக் கவர்தலின் அதனையுங் கூற்றம் என்றார் எனவே கொள்ளுதல் வேண்டும்.
|
|
|
மேகலை : இடக்கரடக்கல். கூற்றம் கூற்றம் என்னும் அடுக்கு தெளிவு பற்றி வந்தது. எதிர்ந்தோர் உயிருண்ணும் கூற்றம் கூற்றம் என்றவாறு. உரைத்தேம் என்றது எமக்கஃதறமாகலின் உரைத்தேம் என்பதுபட நின்றது. ”கால் தொடர்ந்து கைவிடாது அரற்றும்” என்புழி முரண்தோன்றியழிந்து செய்யுளின்ப மிகுதல் உணர்க. தேன்சேர் திருவடி என்றது, மலர் என்று கருதி வண்டுகள் வீழ்தற்குக் காரணமான அழகிய அடி என்றவாறு
|
( 145 ) |
| 638 |
கள்வாய்ப் பெயப்பட்ட மாலைக் |
| |
கருங்குழல்கள் கண்டார் நைய |
| |
வுள்வாய்ப் பெயப்பட்ட வெம்மதுச்செப் |
| |
போரிணைமெல் லாக மீன்ற |
| |
புள்வாய் மணிமழலைப் பொற்சிலம்பி |
| |
னிக்கொடியை யீன்றாள் போலுங் |
| |
கொள்வா னுலகுக்கோர் கூற்றீன்றா |
| |
ளம்மவோ கொடிய வாறே. |
|
|
(இ - ள்.) கள்வாய்ப் பெயப்பட்ட மாலைக் கருங்குழல்கள் - தேன் பெய்யப் பெற்ற மாலையணிந்த கருங்குழல்களையும், கண்டார் நைய மெல் ஆகம் ஈன்ற உள்வாய் வெம்மதுப் பெயப்பட்ட ஓர் இணைச் செப்பு - பார்த்தோர் மெலியுமாறு மெல்லிய மார்பு ஈன்ற, உள்ளே விருப்பமூட்டும் மது பெய்யப்பெற்ற, இரண்டு செப்புகளையும்; புள்வாய் மணி மழலைப் பொற்சிலம்பின் - அன்னத்தின் வாய்போல வாயின்கண் இடப்பட்ட மணியாகிய நாவால் மழலை மொழியும் பொற்சிலம்பையும் உடைய; இக் கொடியை ஈன்றாள் - இக் கொடியைப் பெற்றவள்; உலகுக்குக் கொள்வான் ஓர் கூற்று ஈன்றாள் போலும் - உலகுக்கு அவ்வுலகின் உயிரைக் கொள்ளுவதற்கு ஒரு கூற்றுவனை ஈன்றவள் போலும்; அம்மவோ! கொடிய ஆறே - அம்மவோ! இவள் மிகக் கொடியளானபடி என்! (என்பார்).
|
|
|
(வி - ம்.) இக் கொடியை யீன்றவளே முன்னர்க் கூற்றுவனை ஈன்றவளாயிருப்பாள் என்றனர்.
|
( 146 ) |
| 639 |
செய்ய தாமரை மேற்றிரு வேகொலோ |
| |
வெய்ய நோக்கின்விச் சாதரி யேகொலோ |
| |
மையில் வானவர் தம்மக ளேகொலென் |
| |
றைய முற்றலர் தார்மன்னர் கூறினார். |
|