| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
370 |
|
|
(இ - ள்.) குலிகச் செப்பு அன கொம்மை வரிமுலை - இங்குலிகச் செப்பே போலப் பருத்த வரிகளையுடைய முலைகள்; நலியும் எம்மை என்பார் - எம்மை வருத்தும் என்பாரும்; நல்ல கண்களால் வலிய வாங்கி எம்மை எய்தாள் - அழகிய கண்களாகிய அம்புகளால் நன்றாக இழுத்து எம்மை எய்தாள்; வாழ்கலேம் - இனி வாழமாட்டேம்; மற்று மெலிய ஆவி விடுக்கும் என்மரும் - இனி மெலிந்து உயிரை விடுவோம் என்பாரும்,
|
|
|
(வி - ம்.) நலியும் : பிறவினையாக (நலிக்கும் என) வந்தது. மெலிய மெலிந்து : எச்சத்திரிபு.
|
|
|
மெலி அ ஆவி விடுக்கும் எனக் கண்ணழித்து இவ்வாற்றால் இளைத்த எம் உயிரும் இனி எம்மைக் கைவிட்டுப்போம் எனக் கூறினுமாம்.
|
( 149 ) |
| 642 |
ஊட்டி யன்ன வுருக்கரக் காரடி |
| |
நீட்டி மென்மலர் மேல்வந்து நின்னலங் |
| |
காட்டி யெம்மைக்கொன் றாயெனக் கைதொழு |
| |
தோட்டை நெஞ்சின ராயுழல் வார்களும். |
|
|
(இ - ள்.) உருக்கு அரக்கு ஊட்டி அன்ன ஆர் அடி - (இயல்பான சிவப்பால்) உருக்கிய அரக்கை ஊட்டினாற் போன்ற நிறத்தோடு பொருந்திய அடிகளை; நீட்டி மென்மலர்மேல் வந்து - எடுத்து வைத்து மெல்லிய மலர்களின்மேல் வந்து; நின் நலம் காட்டி - நின் அழகைக் காட்டி; எம்மைக் கொன்றாய் என - எம்மை வருத்தினாய் என்றுகூறி; கைதொழுது - கை கூப்பி; ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும் - அறைபோன உள்ளத்தினராக உழல்கின்றவர்களும் (ஆயினர்).
|
|
|
(வி - ம்.) நீட்டி என்றது நீட்டப்படாத மெல்லியல்புடைய அடியை நீட்டி என்பதுபட நின்றது. கொன்றாய் என்றது துன்பத்தின் கொடுமையை உணர்த்தியபடி. ஓட்டை நெஞ்சினர் - அறிவு ஒழுகிப்போன நெஞ்சுடையோர்.
|
( 150 ) |
வேறு
|
|
| 643 |
திங்கண் மதிமுகத்த சேலும் |
| |
பவளமுஞ் சிலையு முத்துங் |
| |
கொங்குண் குழலாண்மெல் லாகத்த |
| |
கோங்கரும்புங் கொழிப்பில் பொன்னு |
| |
மங்கை குழியா வரக்கீத்த |
| |
செந்தளிர்நெய் தோய்த்த போலு |
| |
மங்கை மலரடியுந் தாமரையே |
| |
யாமறியே மணங்கே யென்பார். |
|