| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
371 |
|
|
(இ - ள்.) திங்கள் மதிமுகத்த - பிறைத் திங்களையுடைய மதிபோலும் முகத்திலுள்ளன (கண்களும் வாயும் புருவமும் பற்களும்); சேலும் பவளமும் சிலையும் முத்தும் - சேற்கெண்டை மீனும் பவளமும் வில்லும் முத்தும் ஒக்கும்; கொங்கு உண்குழலாள் மெல் ஆகத்த - மணம்கமழும் கூந்தலை யுடையாளின் மெல்லிய மார்பிலுள்ள முலைகளும் சுணங்கும்; கோங்கு அரும்பும் கொழிப்பு இல் பொன்னும் - கோங்கரும்புகளும் ஓட்டற்ற பொன்னும் ஒக்கும்; அங்கை குழியா அரக்கு ஈத்த செந்தளிர் நெய் தோய்த்த போலும் - அகங்கைகள் குழிவிலவாய்ச் செந்நிறம் ஊட்டப்பெற்ற தளிரில் நெய் தோய்த்தவற்றை ஒக்கும்; மங்கை மலர் அடியும் தாமரையே - மங்கையின் மலரனைய அடியும் தாமரையே போலும்; அணங்கே யாம் அறியேம் என்பார் - இவை வருத்தும் வருத்தம் ஒன்றுமே இத்தன்மைத்தென யாம் அறிகின்றிலேம் என்பார்கள்.
|
|
|
(வி - ம்.) இவற்றில் நம்மை வருத்துவது இஃதென்று யாம் அறியேம் என்றுமாம். அணங்கே : ஏ : தேற்றம்.
|
( 151 ) |
| 644 |
பொன்மகரம் வாய்போழ்ந்த முத்தநூ |
| |
றோள்யாப்பிற் பொலிந்த வாறு |
| |
மின்மகரங் கூத்தாடி வில்லிட் |
| |
டிருங்குழைக்கீ ழிலங்கு மாறு |
| |
மன்மகர வெல்கொடியான் மால்கொள்ளக் |
| |
கால்கொண்ட முலையி னாளை |
| |
யென்னரம்பை யென்னாவா றென்பா |
| |
ரிமைக்குங்கண் ணிவையோ வென்பார். |
|
|
(இ - ள்.) மன் மகர வெல்கொடியான் மால்கொள்ளக் கால்கொண்ட முலையினாளை - பெருமை பொருந்திய மகரமாகிய வெற்றிக் கொடியினானும் மயங்குமாறு அடிபரந்த முலையினாளை; அரம்பை என்னாவாறு - தெய்வமகள் என்னாதபடி; பொன்மகரம் வாய் போழ்ந்த முத்தநூல் தோள் யாப்பின் பொலிந்த ஆறும் - பொன்னாலான மகரம் தன் வாய் அங்காத்தலின் தோன்றிய முத்துவடம் தோள்கட்டில் அமைந்த படியும்; மின் மகரம் கூத்தாடி வில்இட்டு இருங்குழைக் கீழ் இலங்கும் ஆறும் - மின்னும் மகரம் அசைதலால் ஒளியை வீசிப் பெருங்குழை காதின்கீழ் விளங்குமாறும்; என் என்பார் - என்னே என்பார்; இமைக்கும் கண் இவையோ என்பார் - (கண் இமைக்கும் என்பார்க்கு) இமைக்குங் கண்கள் இவைளோ என்பார்.
|
|
|
(வி - ம்.) ஓகாரம் எதிர்மறை. இப்பூண்கள் கந்தருவர் செய்தனவாகலின், இவள் தெய்வம் அன்றென்று தெளிவித்தன என்றும், கண்
|
|