| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
372 |
|
|
இமையா நிற்கவும் மானிடரிற் சிறப்புண்டென்றுங் கூறினார். (இமையாக் கண்கள் வானவர்க்குண்டு.) இது, 'வண்டே யிழையே வள்ளி பூவே' (தொல் - களவு. 4 ) என்னும் சூத்திர விதி. மன் - பெருமை.
|
( 152 ) |
| 645 |
கோள்வயிர நீளருவிக் குன்றிவர்ந்த |
| |
செஞ்சுடர்போற் கொலைவேன் மன்னர் |
| |
நீள்வயிர வெண்மருப்பி னீலக் |
| |
களிற்றின்மே னிரைத்தார் பொங்கத் |
| |
தோள்வயிரந் தோன்றத் தொழுவா |
| |
ரழுதுநைவார் தொக்கோர் கோடி |
| |
வாள்வயிரம் விற்கு மடநோக்கி |
| |
யார்கொலோ பெறுவ ரென்பார். |
|
|
(இ - ள்.) கொலை வேல் மன்னர் - கொலை வேலேந்திய வேந்தர்கள்; கோள் வயிரம்நீள் அருவிக் குன்று இவர்ந்த செஞ்சுடர்போல் - கோளகையாகிய வயிரமணியையுடைய அருவியைக் கொண்ட குன்றின்மேல் ஏறிய செஞ்ஞாயிறு போல; நீள்வயிர வெண் மருப்பின் நீலக்களிற்றின்மேல் - நீண்ட வயிரப்பூண் இட்ட வெள்ளிய தந்தத்தையுடைய கரிய யானையின் மேல்; நிரைத் தார் பொங்க - நிரையான மாலை பொங்கவும்; தோள்வயிரம் தோன்ற - தோளில் அணிந்த வயிரம் தோன்றவும்; தொழுவார் அழுது நைவார் - (கந்தருவதத்தையைத்) தொழுவாரும் அழுது வருந்துவாருமாய்; தொக்கோர் கோடி - இங்குக் கூடிய மன்னர்கள் கோடியாயிருந்தார்; வாள் வயிரம் விற்கும் மடநோக்கி - வாளின் செற்றத்தை மாற்றும் மடநோக்கியாகிய இவளை; பெறுவார் யார் கொலோ என்பார் - பெறும் நல்வினையுடையோர் யாவரோ என்பார்.
|
|
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர் நிரைத்தார் என்பதற்கு வாகைத்தார் எனவும், தோள்வயிரம் என்பதற்குத் தோள் வலிமையாலுண்டான புகழ் எனவும் பொருள் கொண்டு,
|
|
|
”மன்னர் குன்றிலே தொழுவார்க்கு இவர்ந்த சுடர்போலே இருந்து அழுது நைவாராய்த் தொக்கு ஒரு கோடியாயிருந்தவர்களில் இம்மட நோக்கியைத் தார்பொங்கத் தோள்வயிரந் தோன்றப் பெறவிருக்கின்ற நல்வினையுடையார் யார் என்பார்” என்று மொழி மாற்றிப் பொருளுரைப்பர்.
|
|
|
கோள்வயிரம் - கோட்பாட்டையுடைய வயிரம். ஆகுபெயராற் கோளகை. பொங்க - மிகுத்துக்காட்ட, அரசர்க்கு : மாலை கூறுதல் இயல்பே. அழுது நைவார் என்றது அவலம்; 'இளிவே யிழவே' (தொல். மெய்ப். 5) என்னுஞ் சூத்திரத்தில், அசைவாவது பழைய தன்மை கெட்டு வேறொருவாறாய் வருந்துதல் ஆதலின், இவரும் அத்தன்மையெய்தி அவலம் உற்றார் என்க. இது தம் அசைவில் தோன்றிய அவலம். ஒருவனென்று துணியலாகாமையிற் பன்மையாற், 'பெறுவார்' என்றார்.
|
( 153 ) |