பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 373 

646 பைம்பொன் நிமிர்கொடி பாவை
  வனப்பென்னுந் தளிரை ஈன்று
செம்பொன் மலர்ந்திளையார் கண்ணென்னுஞ்
  சீர்மணிவண் டுழலச் சில்லென்
றம்பொற் சிலம்பரற்ற அன்னம்போல்
  மெல்லவே ஒதுங்கி அம்பூஞ்
செம்பொற் புரிசை அடைந்தாள்செந்
  தாமரைமேற் றிருவோ டொப்பாள்.

   (இ - ள்.) வனப்பு என்னும் தளிரை ஈன்று - அழகென்னும் தளிரை யீன்று; செம்பொன் மலர்ந்து - பொன்னைப் பூத்து; இளையார்கண் என்னும் சீர்மணி வண்டு உழல - இளைஞரின் கண்களாகிய அழகிய கரிய வண்டுகள் உழலும்படி; பைம்பொன் நிமிர்கொடி - புதிய பொன்னாக வளர்ந்ததொரு கொடியையும்; பாவை - பாவையையும்; செந்தாமரைமேல் திருவோடு ஒப்பாள் - செந்தாமரையின்மேல் திருவையும் போன்றவள்; சில் என்று அம்பொன் சிலம்பு அரற்ற - சில்லென அழகிய பொற்சிலம்பு ஒலிக்க; அன்னம்போல் மெல்லவே ஒதுங்கி - அன்னம்போல மெல்லென்று நடந்து; அம்பூ செம்பொன் புரிசை அடைந்தாள் - அழகிய பொலிவுடைய பொன்மதிலை அடைந்தாள்.

 

   (வி - ம்.) ஒடு : எண்ணொடு. செம்பொன் : சுணங்கு. புரிசை : மண்டபத்தின் மதில்.

 

   கொடியையும் பாவையையும் திருமகளையும் ஒப்பவளாகிய காந்தருவ தத்தை ஈன்று மலர்ந்து உழல அரற்ற ஒதுங்கிப் புரிசை அடைந்தாள் என்க.

 

   வனப்பு - பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகு. ஒதுங்குதல் - நடந்தல்.

( 154 )
647 பட்டியன்ற கண்டத் திரைவளைத்துப்
  பன்மலர்நன் மாலை நாற்றி
விட்டகலாச் சாந்தி னிலமெழுகி
  மென்மலர்கள் சிதறித் தூம
மிட்டிளைய ரேத்த விமையார்
  மடமகள்போ லிருந்து நல்யாழ்
தொட்டெழீஇப் பண்ணெறிந்தாள் கின்னரரு
  மெய்ம்மறந்து சோர்ந்தா ரன்றே.

   (இ - ள்.) பட்டு இயன்ற கண்டம் திரை வளைத்து - பட்டினாற் செய்யப்பட்ட பல நிறத் திரையை வளைத்து; பன்மலர் நன்