| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
374 |
|
|
மாலை நாற்றி - பல மலர்களால் ஆன அழகிய மாலையைத் தூக்கி; விட்டு அகலாச் சாந்தின் நிலம் மெழுகி - மணம் விட்டு நீங்காத சாந்தினாலே நிலத்தை மெழுகி; மென்மலர்கள் சிதறி - மெல்லிய பூக்களைத் தூவி: தூமம் இட்டு - அகிற் புகையிட்டு; இளையர் ஏத்த - இளமகளிர் புகழ; இமையார் மடமகள்போல் இருந்து - வானவரின் இளநங்கைபோல் அமர்ந்து; நல்யாழ் தொட்டுப் பண் எழீஇ - நல்ல யாழை யெடுத்துப் பண்ணை யெழுப்பி; எறிந்தாள் - நரம்பைத் தெறித்தாள்; கின்னரரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் - (அப்போழுது) கின்னரரும் தம்மை மறந்து சோர்ந்தனர்.
|
|
|
(வி - ம்.) தூமம் : அகிலுக்கு ஆயினதால் காரிய வாகுபெயர். கண்டத்திரை - கண்டமாகிய திரை. யாழ் மண்டபத்தே யிருந்து அவை வணக்கமாகப் பாடுகின்றாள். இஃது அவைப் பரிசாரம் எனவும்படும்.
|
|
|
பட்டியன்ற - பட்டினாலியற்றப்பட்ட. கண்டத்திரை - பல நிறத்தால் கூறுபட்டதிரை (முல்லைப். 44 - நச்.) நாற்றுதல் - தூங்கவிடுதல். விட்டகலா என்புழித் தகுதியால் மணம் என வருவித்து ஒட்டுக. கின்னரர் - தேவருள் ஒருவகையினர்.
|
( 155 ) |
வேறு
|
|
| 648 |
புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண் |
| |
டன்புகொண் மடப்பெடை யலமந்தாங் ககல்வதனை |
| |
யென்புருகு குரலழைஇ யிருஞ்சிறகர் குலைத்துகுத்துத் |
| |
தன்பெடையைக் குயிறழுவத் தலைவந்த திளவேனில். |
|
|
(இ - ள்.) புன் காஞ்சித் தாது தன் புறம் புதைய - புல்லிய காஞ்சித் தாதினில் தன் முதுகு மறைதலாலே; கண்டு கிளி என - பார்த்து அதனைக் கிளியென் றெண்ணி; அன்புகொள் மடப்பெடை ஆங்கு அலமந்து அகல்வதனை - காதல் கொண்ட இளம்பெடை அங்கிருந்து மனஞ்சுழலச் செல்வதை; என்பு உருகு குரல் அழைஇ - என்பும் உருகும் தன் குரலாலே அழைத்து; இருஞ் சிறகர் குலைத்து உகுத்து - கரிய சிறகை அசைத்துத்தாதை உதிர்த்து; தன் பெடையைக் குயில் தழுவ - தன் பெட்டையைக் குயில் தழுவுமாறு; இளவேனில் தலைவந்தது - இளவேனில் அவ்விடத்து வந்தது.
|
( 156 ) |
| 649 |
தண்காஞ்சித் தாதாடித் தன்னிறங் கரந்ததனைக் |
| |
கண்டானா மடப்பெடை கிளியெனப்போய்க் கையகல |
| |
நுண்டூவி யிளஞ்சேவ னோக்கோடு விளிபயிற்றித் |
| |
தன்சிறகாற் பெடைதழுவத் தலைவந்த திளவேனில். |
|