பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 378 

   (வி - ம்.) நச்சினார்க்கினியர் 'கலிகொண்டு' என்பதனை, 'இலங்கு பொற் கிண்கிணியாள்' என்பதன் முன்கூட்டிப் பொருளுரைப்பர்.

 

   கொண்டு - கொள்ள : எச்சத்திரிபு, ஒலி - தழைத்தல். 'ஒலிதெங்கு' (பதிற், 18) போல. எல்லே - வெளியே, கலி - ஆரவாரம்.

 

   ”கடாமுங் குருதியுங் கால்வீழ்ந்த பச்சைப் - படாமும் புலித்தோலும் சாத்தும் பரமன் - இடாமுண்ட நெற்றியான் எஞ்ஞான்றுங் கங்கை - விடாமுண்ட நீர்ச்சடையான் வெண்ணீறணிந்தோன் - மெய்யுறுநோயில்லைவேறோர் பிறப்பில்லை - ஐயுறு நெஞ்சில்லை ஆகாத தொன்றில்லை” - என நான்கடிச் செய்யுள் முடியவும் ஈற்றடி இரண்டு மிக்கு வேறுபட வந்த கொச்சகம் என்று கூறி, ஒழிந்தனவும் பிற வேறுபாட்டான் வந்தனவுங் காண்க” [தொல் - செய் - 149, நச் - பேர். மேற்] என்றமையின் இச்செய்யுள் (652 -3) இரண்டும் ஒரோவோரடி மிக்கு வேறுபட வந்த கொச்சக யொருபோகாம்.

( 161 )

வேறு

 
654 நுண்டுகி லகலல்கு னொசித்த வெம்முலை
உண்டிவ ணுசுப்பென வுரைப்பி னல்லது
கண்டறி கிலாவிடைக் காம வல்லியாழ்
கொண்டவர் குழாத்திடைக் கொடியி னொல்கினாள்.

   (இ - ள்.) நுண்துகில் அகல் அல்குல் - நுண்ணிய துகிலணிந்த அகன்ற அல்குலும்; நொசித்த வெம் முலை - (பிறரை) வருத்திய வெம்முலைகளும்; இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது - இவட்கு இடையுண்டெனக் கூறுமதுவல்லது; கண்டு அறிகிலா இடைக் காமவல்லி - கண்ணாற் கண்டறிய முடியாத இடையையுடைய தத்தை; யாழ் கொண்டு அவர் குழாத்திடைக் கொடியின் ஒல்கினாள் - யாழை எடுத்துக்கொண்டு தோழியர் குழுவினிடையே கொடியைப் போல ஒதுங்கிச் சென்றாள்.

 

   (வி - ம்.) இதனால், திரையருகில் நின்றும் யாழ்வாசிக்கும் இடத்திற்குச் செல்கின்றாளென்றார்.

 

   இவள் இடை கருதலளவையால் உண்டென உணரப்படுவதல்லது காட்சியளவையாற் காணப்படுவதன்றென்பது கருத்து.

( 162 )
655 பளிக்கொளி மணிச்சுவ ரெழினி பையவே
கிளிச்சொலி னிளையவர் நீக்கக் கிண்கிணி
யொளிக்குமின் றாடவ ருயிர்க ளென்னநொந்
தளித்தவை யிரங்கச்சென் றணையி லேறினாள்.

   (இ - ள்.) பளிக்கு ஒளி மணிச்சுவர் எழினி - பளிங்காகிய ஒளிமணியாற் செய்த சுவரை மறைய வீழ்த்த திரையை; கிளிச்சொலின் இளையவர் பையவே நீக்க - கிளி மொழியினாராகிய