பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 379 

மங்கையர் மெல்லெனவே நீக்காநிற்க; இன்று ஆடவர் உயிர்கள் ஒளிக்கும் என்ன நொந்து - இன்று ஆடவர்களின் உயிர்கள் மறையும் என்ன வருந்தி; கிண்கிணி அவை அளித்து இரங்கச் சென்று - கிண்கிணிகளாகிய அவை அருள் செய்து இரங்கப் போய்; அணையில் ஏறினாள் - அணையிலே அமர்ந்தாள்.

 

   (வி - ம்.) பளிங்குமணி ஒளிமணி எனத் தனித்தனிக் கூட்டுக. பளிங்கு மணி என்னும் அல்வழிப் புணர்ச்சியின் மென்றொடர் வன்றொடராயது இலேசானே கொள்க; குரக்குமனம் எற்புடம்பு என்பனபோல. எழினி - திரை.

( 163 )
656 உறைகழித் திலகுவா ளுடற்றுங் கண்ணினாண்
மறையொளி மணிச்சுவ ரிடையிட் டித்தலை
யிறைவளை யாழ்தழீஇ யிருப்ப வத்தலைக்
கறைகெழு வேலினார் கண்ணி தீந்தவே..

   (இ - ள்.) உறைகழித்து இலகு வாள் உடற்றும் கண்ணினாள் - உறையிலிருந்து நீக்கி விளங்கும் வாளை வருத்தும் கண்ணினள்; மறை ஒளி மணிச் சுவர் இடையிட்டு - தன்னை மறைக்கச் சமைத்த ஒளியுறும் பளிக்குச் சுவரை நடுவேயிட்டு; இத்தலை இறைவளை யாழ் தழீஇ இருப்ப - உட்பக்கத்தே வளைந்த யாழைக் கையினால் தழுவியிருக்கும்போது; அத்தலைக் கறைகெழு வேலினார் கண்ணி தீந்தவே - புறத்தே யிருந்த குருதிக்கறை பொருந்திய வேல் மன்னரின் கண்ணிகள் காமத்தாலே கருகின.

 

   (வி - ம்.) பளிங்கிற்கு இரண்டு புறத்தோரும் தோன்றுவர். இறை - இரேகை, ஆகுபெயர். 'பதுமம் வீரம் சிங்கம் பிரமரம் - பாத விலக்கண மஞ்சானு மண்டிதம் - விதியுறு பங்கோற் பவஞ்சுக மண்டிலம் - மேலோர் விரும்பும் மெய்யாசனமே.' இவ்வொன்பதினும் இவள் பதுமா சனத்தேயிருந்தாள்; 'நேரிருந்து காலடிகள் மாற்றிக் குதிமேலாப் - பாரிருத்தல் பத்மாசனம்' 'ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி - நண்பால் அமைந்த இருக்கையள்' (சிலப். 8 : 25-6) என்றார் பிறரும்.

 

   இருப்பவே இந்நிலையர் ஆயினர்; இனி அவள் பாடுங்கால் என்னாவர் என்றிரங்கியபடியாம்.

( 164 )
657 சிலைத்தொழிற் சிறுநுதற் றெய்வப் பாவைபோற்
கலைத்தொழிற் படவெழீஇப் பாடி னாள்கனிந்
திலைப்பொழிற் குரங்கின வீன்ற தூண்டளிர்
நிலத்திடைப் பறவைமெய்ம் மறந்து வீழ்ந்தவே.

   (இ - ள்.) சிலைத்தொழில் சிறுநுதல் - ஏறிட்ட வில்போலும் சிறுநுதலாள்; தெய்வப் பாவைபோல் - தெய்வப் பாவைபோல் இருந்து; கலைத் தொழில்பட எழீஇப் பாடினாள் - இசைக் கலைத் தொழில் பொருந்த யாழை வாசித்துக்