| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
380 |
|
|
கொண்டு அதற்குத்தகப் பாடினாள்; இலைப்பொழில் கனிந்து குரங்கின - இலையுறு பொழில்கள் உருகி வளைந்தன; தூண் தளிர் ஈன்ற - தூண்கள் தளிரை யீன்றன; பறவை மெய்ம்மறந்து நிலத்திடை வீழ்ந்த - கின்னர மிதுனம் என்னும் பறவைகள் தம்மை மறந்து நிலத்திடை வீழ்ந்தன.
|
|
|
(வி - ம்.) கின்னர மிதுனங்கள் - ஒன்றையொன்று பிரியாத இசையறிவிற் சிறந்த ஆணும் பெண்ணுமான இரட்டைப் பறவைகள்.
|
|
|
தெய்வப் பாவை : தெய்வத்தாற் செய்த கொல்லிப்பாவை. 'பூதம் புணர்த்த புதிதியல் பாவை' (நற். 192) என்றார் பிறரும். கலைத் தொழிலாவன : பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் - கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் - நண்ணிய குறும்போக்கு' (சிலப். 7 : 1) என்ற எட்டும். பண்ணல் : பாட நினைத்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல். பரிவட்டனை : அவ் வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ் செய்து தடவிப் பார்த்தல். ஆராய்தல் : ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது. தைவரல் : அநுசுருதி யேற்றுதல். செலவு : ஆளத்தியிலே நிரம்பப்பாடுதல். விளையாட்டு : பாட நினைந்த வண்ணத்திற் சந்தத்தை விடுதல். கையூழ் : வண்ணத்திற் செய்த பாடல் எல்லாம் இன்பமாகப் பாடுதல். குறும்போக்கு : குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல்.
|
( 165 ) |
வேறு
|
|
| 658 |
கருங்கொடிப் புருவ மேறா |
| |
கயனொடுங் கண்ணு மாடா |
| |
வருங்கடி மிடறும் விம்மா |
| |
தணிமணி யெயிறுந் தோன்றா |
| |
விருங்கடற் பவளச் செவ்வாய் |
| |
திறந்திவள் பாடி னாளோ |
| |
நரம்பொடு வீணை நாவி |
| |
னடந்ததோ வென்று நைந்தார். |
|
|
(இ - ள்.) கருங்கொடிப் புருவம் ஏறா - கரிய ஒழுங்கான புருவங்கள் நெற்றியில் ஏறா; கயல்நெடுங் கண்ணும் ஆடா - கயலனைய நெடிய கண்களும் ஆடா; அருங்கடி மிடறும் விம்மாது - அரிய விளக்கம் பொருந்திய மிடறும் வீங்காது; அணிமணி எயிறும் தோன்றா - அழகிய முத்தனைய பற்களும் தெரியா; இவள் இருங்கடல் பவளச் செவ்வாய் திறந்து பாடினாளோ? - இவள் பெரிய கடலில் உள்ள பவளம் அனைய தன் செவ்வாயைத் திறந்து பாடினாளோ?; நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ? - அன்றி, யாழ்தான் தனக்குரிய நரம்புடன் சாரீர வீணைக்குரிய
|
|