| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
381 |
|
|
நாவாலும் பாடிற்றோ?; என்று நைந்தார் - என்று கூறி அரசர் முதலானோர் வருந்தினார்.
|
|
|
(வி - ம்.) இது பதினொரு வகையிலும் உள்ளாளப் பாட்டுப் பாடுங்கால் இடைபிங்கலையை இயக்கம் அறுத்து, மூலாதாரம் முதல் பிரமரந்திரம் அளவும் இயக்கம் ஆக்கி, நடுவு தொழில்வரப் பாடுதல் என்றறிக;
|
|
| |
”உள்ளாளம் விந்துவுடன் நாதம் ஒலியுருட்டுத் |
|
| |
தள்ளாத தூக்கெடுத்தல் தான்படுத்தல் - மௌ்ளக் |
|
| |
கருதி நலிதல்கம் பித்தல் குடிலம் |
|
| |
ஒருபதின் மேலென் றுரை.” |
|
| |
”கண்ணிமையா கண்டம் துடியா கொடிறசையா |
|
| |
பண்ணளவு வாய்தோன்றா பல்தெரியா - எண்ணிலிவை |
|
| |
கள்ளார் நறுந்தெரியற் கைதவனே? கந்தருவர் |
|
| |
உள்ளாளப் பாடல் உணர்.” |
|
|
இசை மரபு
|
( 166 ) |
வேறு
|
|
| 659 |
இசைத்திறத் தனங்கனே யனைய நீரினார் |
| |
வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழெழீஇ |
| |
விசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலா |
| |
மசிப்பபோன் றிருவிசும் படைந்த வென்பவே. |
|
|
(இ - ள்.) இசைத் திறத்து அனங்கனே அனைய நீரினார் - இசையின் நெறியிலே காமனே யனைய தன்மையராகிய; வசைத்திறம் இலாதவர் - வசை வகையறியாதவர்; வான் பொன் யாழ் எழீஇ - உயர்ந்த பொன் யாழை வாசித்து; அவர் விசைத்துப் பாடலின் - அவரும் உச்சத்தே பாடுதலின்; புள் எலாம் வெருவி - (முன் மெய்ம்மறந்து வீழ்ந்த) பறவைகள் எல்லாம் வெருவி; அசிப்ப போன்று இருவிசும்பு அடைந்த - அவரை நகைப்பன போலப் பெரிய வானை அடைந்தன.
|
|
|
(வி - ம்.) என்ப, ஏ : அசைகள். அசிப்ப : ஹஸிப்ப என்னும் வடசொல் திரிபு.
|
|
|
அனங்கனேயனைய நீரினார் என்றது அரசர் மக்களை. குலமொத்தலின் அரசரை முற்கூறினார். இன்பம் கெழுமப் பாடுதலறியாது தாம் அவளை வெல்லுதற் பொருட்டு விசைத்துப் பாடினர் என அவர்தம் மாட்டாமையையும் நோக்கத்தினையும் ஒருங்கே உணர்த்துவார் விசைத்தவர் பாட என்றார். அசித்தல் - பரிகசித்தல்.
|
( 167 ) |
| 660 |
மாதர்யாழ் தடவர வந்த மைந்தர்கைக் |
| |
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம் |
| |
போதரப் பாடினாள் புகுந்த போயின |
| |
தாதலர் தாரினார் தாங்கள் பாடவே. |
|