| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
382 |
|
|
(இ - ள்.) மாதர் யாழ் தடவர வந்த கேள்விக் கின்னரம் - தத்தை யாழை வாசித்தல் கேட்டு வந்தனவாகிய அறிவுடைய கின்னர மிதுனங்கள்; மைந்தர் கைக்கீதத்தான் மீண்டன - ஆடவரின் யாழிசையாலே திரும்பிப் போயின; போதரப் பாடினாள் புகுந்த - அவை உள்ளே வருமாறு பாடினாள், அவையும் புகுந்தன; தாது அலர் தாரினார் தாங்கள் பாட போயின - தாது மலருந் தாரினார் தம் குரலாற் பாடலால் மீண்டும் போயின.
|
|
|
(வி - ம்.) தேவர் தத்தை வென்றமைக்கும் அரசர் தோற்றமைக்கும் இசையுணர்வு சான்ற கின்னரங்களையே சான்றாகக் கொண்டுணர்த்துதல் மிகவும் இனிமை பயக்கின்றது. மாதர் : தத்தை. தடவர - தடவ; வருட என்றவாறு, யாழ்வாசினை என்பது தோன்ற கைக்கீதம் என்றார். கின்னரம் இசையுணர்வு மிக்கன என்பதுணர்த்துவார் கேள்விக் கின்னரம் என்றார். கேள்வி - இசையுணர்ச்சிக்கு ஆகுபெயர்.
|
( 168 ) |
| 661 |
சுரும்பெழுந் திருத்துணுந் தொங்கல் வார்குழ |
| |
லரும்பெற லவட்கிசை யரசர் தோற்றபின் |
| |
னரம்பொடு தௌ்விளி நவின்ற நான்மறை |
| |
வரம்பெறு நெறியவர் மலைதன் மேயினார். |
|
|
(இ - ள்.) சுரும்பு எழுந்திருந்து உணும் தொங்கல் வார் குழல் - வண்டுகள் எழுந்திருந்து தேனைப் பருகும் மாலையையுடைய நீண்ட கூந்தலையுடைய; அரும்பெறலவட்கு - பெறுதற்கரிய தத்தைக்கு; அரசர் இசை தோற்றபின் - அரசர்கள் இசையைத் தோற்ற பின்னர்; நரம்பொடு தௌ்விளி நவின்ற - நரம்பொடு சேர்ந்த தெளிந்த இசையிலே பழகிய; நான்மறை வரம்பெறு நெறியவர் மலைதல் மேயினார் - நான்மறை யோதுதலாகிய மேன்மையைப் பெற்ற அந்தணர் பொருதலைத் தொடங்கினார்.
|
|
|
(வி - ம்.) வண்டுகள் தேனை எழுந்திருந்துண்ணுதல், 'நறுந்தாதூதும் தும்பி - கையாடு வட்டிற் றோன்றும்' (அகநா. 108) என்னுமிடத்துங் காண்க. 'சுரும்பெறிந் திருந்து' என்றும் பாடம்.
|
( 169 ) |
வேறு
|
|
| 662 |
திருமலர்க் கமலத் தங்கட் |
| |
டேனின முரல்வ தொப்ப |
| |
விரிமலர்க் கோதை பாட |
| |
வெழால்வகை வீரர் தோற்றார் |
|