பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 384 

காமர் பங்கயப் பழனம் ஒத்தார் - வாடைக் காற்றுப் பொருதலாலே கருகிய அழகிய தாமரைப் பழனத்தைப் போன்றார்.

 

   (வி - ம்.) வாலரக்கு என்றது சாதிலிங்கத்தை. நூல் - இசை நூல். நுண்ணூல் என்றது பூணூலை. பூணூல் பூண்பதில் இவர் வல்லுநரே ஆயினும் இசை நூலில் இவர் தத்தையை வெல்வதெங்ஙனம் என்பார் நுண்ணூல் வணிகரும் தொலைந்துபோனார் என்றார்.

( 171 )
664 தேனுயர் மகர வீணைத் தீஞ்சுவை யிவளைவெல்வான்
வானுயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமனாகு
மூனுயர் நுதிகொள் வேலீ ரொழிகவீங் கில்லை யென்றான்
கானுய ரலங்கன்மாலைக் கட்டியங் கார னன்றே.

   (இ - ள்.) கான் உயர் அலங்கல் மாலைக் கட்டியங்காரன் - மணம் மிகுந்த அலங்கலாகிய மாலையை உடைய கட்டியங்காரன் என்பவன்; தேன்உயர் மகர வீணைத் தீஞ்சுவை இவளை வெல்வான் - இனிமையிலே மேம்பட்ட மகர வீணையின் இன்சுவையாலே இவளை வெல்கிறவன்; வான் உயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமன் ஆகும் - வானவரின் உயர்ந்த அறிவைக் கெடுக்கின்ற நீண்ட வில்லையுடைய காமன் ஆவான்; ஈங்கு இல்லை - இங்கே யில்லை; (ஆகையால்) ஊன் உயர் நுதிகொள் வேலீர் - ஊனைக் கொண்டுயர்ந்த நுனியையுடைய வேலினீர்!; ஒழிக என்றான் - (இவளொடு பொருவதை) விடுக என்றுரைத்தான்.

 

   (வி - ம்.) தேனுயர் வார்சிலை எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

 

   இதன்கண் கட்டியங்காரன் தத்தையை அரசருள் எவரேனும் வென்று கைக்கொள்ளுவரோ என்று அஞ்சிக் கிடந்து ஒருவரும் வெல்லாமையுணர்ந்த பின் தன்னுள்ளே மகிழ்ந்து கூறும் அவன் மனநிலைதெற்றெனப் புலப்படும்படி தேவர் புலப்படுத்தியிருந்தல் நுண்ணிதின் உணர்க. ”எல்லோருஞ் செத்தால் வாழ்ந்தது போலே” என்பதொரு பழமொழி

( 172 )
665 மறுமுயற் கிவர்ந்த வேக
  மாசுண மடையப் பட்ட
நிறைமதி போன்று மன்னர்
  ஒளிகுறைந் துருகி நைய
வறுபகல் கழிந்த பின்றை
  யந்நகர்க் காதி நாய்கன்
சிறுவனோர் சிங்க வேற்றை
  சீவக சாமி யென்பான்,