| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
389 |
|
|
வேலைநெய் பெய்த - கடலென நெய்யைத் தீயிலே பெய்து வேள்வி ஆற்றிய; திங்கள் விரவிய பெயரினாற்கு - புத்திசேனனுக்கு; மேலைநாள் பட்டது ஒன்று - முந்தை நாளிற் பட்டதாகிய ஒன்று; விளம்புவல் இது கேள் என்றான் - கூறுவேன்; இதனைக் கேள் என்றான்.
|
|
|
(வி - ம்.) திங்கள் - மதி: மதி - புத்தி. எனவே, திங்கள் விரவிய பெயரினான்; புத்திசேனன்; 'தீத்தீண்டு கையார்' (திணைமாலை : 5) என்பது வேங்கையை உணர்த்தினாற்போல. நச்சினார்க்கினியர் 669 - முதல் மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கொண்டு கூட்டும் முறை :
|
|
|
[”வாசிக்கின்றான், பெயர். இக் கவியில் (670) 'இது பட்டது அடிகள் என்றாள்' என்னுமிடத்து, 'அடிகள் என்றாள்' என்பதனை, 'மேலேநாட் பட்டதொன்று விளம்புவல் அடிகள் என்றாள்' என அதனோடு கூட்டி, ஓலை கொண்டு வந்தவள வார்த்தை ஆக்குக. 'கேளிதென்றான்' என்பதனை, அது கேட்ட கந்துகன் திங்கள் விரவிய பெயரினாற்கு, இவள் கூறுகின்ற இதனை நீ கேளென்றான் என்க. 'இன்னன்' (சீவக. 663) என்னுங் கவியில் 'சூழ்ச்சி தன்னுள்ளான்' என்பதன் பின்னே, 'இது பட்டது என்றாள்' என ஓலை கொண்டு வந்தவ்ள் கந்துகன் சிறைப்புறமாகப் புத்திசேனனுக்குச் செய்தி கூறினாளாக்கி முடித்து, 'ஓலையை' என்னுங் கவியில், 'மறைய நல்கி' என்பதளவாக அதன் பின்னே கூட்டிப், 'படையமைத் தெழுமின்' என்பதனை அதன் பின்னே கூட்டுக. 'என்றாள்' இரண்டிடத்துங் கூட்டுக. இங்ஙனங் கூறாது, 'இதுபட்ட தடிகள்' என்று கந்துகனுக்கு அவள் கூற, அவன் புத்திசேனனுக்குக் கூறினானென்று கூறின், புதல்வன் செய்தியைத் தந்தை கூறும் முறையாற் கூறாது இடக்கர் முதலிய கூற்றாற் கூறினானாகத் தேவர் கூறாரென்றுணர்க.”]
|
|
|
கந்துகனுக்குப் புத்திசேனன் மகனுமல்லன் : மகன் முறையனே. அவனிடம் தன் வளர்ப்பு மகனாகிய சீவகன் செய்தியை இடக்கர் முதலியவற்றாற் கூறானென்பதற்காகவே மேற்கூறியவாறு பல செய்யுட்களினின்றும் வேண்டியபடி எங்கும் எடுத்துக் கூட்டுமாறு மாட்டேற்று முறையால் தேவர் செய்தார் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. மற்றும், இதனை இடக்கர் என்று கூறத் தகாதெனக் கருதினாரேல்,
|
|
| |
”தூசுலாய்க் கிடந்த வல்கு றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் |
|
| |
வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி |
|
| |
யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள் |
|
| |
காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தையென் பாள்”(சீவக. 550) |
|
|
எனவும்,
|
|
| |
”அளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ |
|
| |
லிளங்கதிர் முலையும் ஆகத் திடங் கொண்டு பரந்த.....”(சீவக. 551) |
|
|
எனவும், தத்தையாகிய தன் மகளின் வனப்பைத் தந்தை சுலுழவேகன் கூறுவது போலவும்,
|
|