| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
390 |
|
| |
”கற்சிறை யழித்து வெள்ளம் கடற்கவா யாங்குக் கற்றோர் |
|
| |
சொற்சிறை யழித்து வேந்தன் றுணைமுலை துறத்தல் செல்லான் |
|
| |
விற்சிறை கொண்ட போலும் புருவத்து விளங்கு வேற்க |
|
| |
ணற்சிறைப் பட்டு நாடும் நகரமுங் காவல் விட்டான்” |
|
|
எனத், தன்னிடம் தன் கணவன் நடந்து கொண்ட, 'காமமே கன்றி நின்ற' நிலையை விசயையாகிய தாய் சீவகனாகிய தன் மகனிடங் கூறுவது போலவும் தேவர் எழுதுவது முறையாகுமா? நிகழ்ந்த நிகழ்ச்சியைப் புத்தி சேனனிடம் கந்துகன் கூறுமாறுபோல நமக்குத் தேவர் கதை கூறுகிறார் என்று கொண்டு, செய்யுட்கள் கிடந்தவாங்கே பொருள் கூறுதலே சிறப்புடைத் தென்க.
|
( 179 ) |
| 672 |
கடியரங் கணிந்து மூதூர்க் |
| |
கடல்கிளர்ந் தனைய தொப்ப |
| |
நடையறி புலவ ரீண்டி |
| |
நாடக நயந்து காண்பான் |
| |
குடையுடை யவனொ டெண்ணிச் |
| |
சீவகற் கொணர்மி னென்னத் |
| |
தொடையல்சூழ் வேலி னானுந் |
| |
தோழருங் காணச் சென்றார்.. |
|
|
(இ - ள்.) மூதூர்க் கடல் கிளர்ந்தனையது ஒப்ப நடை அறி புலவர் ஈண்டி - இப் பெருநகரில் கடல் ஆரவாரித் தெழுந்தாற் போல நாடக நெறியறிந்த புலவர்கள் குழுமி; நாடகம் நயந்து காண்பான் - நாடக மொன்றை விரும்பிக் காணற்கு; கடி அரங்கு அணிந்து - விளக்கமுற்ற அரங்கினை அமைத்து; குடை உடையவனொடு எண்ணி - அரசனுடன் ஆராய்ந்து; சீவகன் கொணர்மின் என்ன - சீவகனைக் கொண்டுவருக என்றுரைக்க; தொடையல் சூழ் வேலி னானும் தோழரும் காணச் சென்றார் - மாலை சூழ்ந்த வேலினானும் தோழர்களும் காண்பதற்குச் சென்றனர்,
|
|
|
(வி - ம்.) இதுமுதல் ஓலை கொண்டு வந்தவள் கூற்றென்பர் நச்சினார்க்கினியர். 'செலவினும்' (தொல் - கிளவி - 28) என்னும் பொது விதியாற், 'சென்றார்' என்றார்.
|
|
|
கடி - விளக்கம்; விளக்கமாவது எழுகோல் அகலத்தினையும் எண்கோல் நீளத்தினையும் ஒரு கோல் குறட்டுயரத்தினையும் வாய்தல் இரண்டினையும் உடைத்தாதல். அணிந்து - பார்ப்பனப் பூத முதலிய நால்வகைப் பூதங்களையும் ஒழிந்தவற்றையும் இயற்றி; 1. கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங் - காடுநகர்க் கியற்றும் அரங்கின நெற்றிமிசை - வழுவில் பூதம் நான்கும் முறைப்பட - எழுதினரியற்றல் இயல்புணர்ந்தோரே.' நடையறி புலவராவார்: இயலாசிரியனும், யாழாசிரியனும், இசையாசிரியனும். குழலோனும், தண்ணுமை முதல்வனும் முதலாயி
|
|
|
|
1. சிலப். 3 : 106 - 7 : அடியார் - மேற்கோள்:
|
|