| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
392  | 
  | 
|  674 | 
பரியகஞ் சிலம்பு செம்பொற் |  
|   | 
  கிண்கிணி பாதஞ் சோ்த்தி |  
|   | 
யரிவையை யரம்பை நாண |  
|   | 
  வணிந்தன னனங்கன ன்னான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) திருவிலே சொரிந்து மின்னும் - வானவில்லென ஒளியுமிழ்ந்து விளங்குகிற; குண்டலம் செம்பொன் ஓலை - குண்டலத்தையும் பொன்னோலையையும்; உருவுகொள் மதியம் அன்ன - நிறைந்த திங்களைப் போன்ற; ஒளிமுகம் சுடர ஆக்கி - ஒளியுறு முகம் விளங்க அமைத்து; பரியகம் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்ததி - காற்சரி சிலம்பு கிண்கிணி ஆகியவற்றை அடியிலே பூட்டி; அரம்பை நாண அரிவையை அனங்கன் அன்னான் அணிந்தனன் - அரம்பையும் வெள்க அந்த அரிவையைச் சீவகன் புனைந்தான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) ”இவளைத் தீண்டவும் வேட்கை நிகழாமையின் 'அனங்கனன்னான்' என்றார்; 'சிலைவில்லான் போலும் செறிவினான்' (கலி. 143) என்றார் பிறரும். அவன் தீண்டுதலின் தனக்கு வேட்கை நிகழவும், அவற்கு நிகழாமை கண்டு, இனிக் கூத்தினால் இவனைப் பிணிப்பேனென்று அவள் ஆடுகின்றாளாம். இவட்கு ஈண்டு வேட்கையின்றேல் மேல் 'ஆடவர் மனங்கள்' (சீவக. 683) என்னுங் கவியில் தோழியை விட்டாளென்றல் பொருந்தாதாம். இதனானே, இவள் நடிக்கின்ற நாடகம் ஒருவன் மேலே ஒருத்தி வேட்கையுற்றதொரு கதையேயாம்” என்பர் நச்சினார்க்கினியர். 
 | 
( 182 ) | 
|  675 | 
தோற்பொலி முழவும் யாழும் |  
|   | 
  துளைபயில் குழலு மேங்கக் |  
|   | 
காற்கொசி கொம்பு போலப் |  
|   | 
  போந்துகைத் தலங்கள் காட்டி |  
|   | 
மேற்பட வெருவி நோக்கித் |  
|   | 
  தானைய விட்டிட் டொல்கித் |  
|   | 
தோற்றினாள் முகஞ்செய் கோலந் |  
|   | 
  துளக்கினாண் மனத்தை யெல்லாம். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தோ பொலி முழவும் யாழும் துளைபயில் குழலும் ஏங்க - தோலாற் பொலிவுற்ற முழவும் யாழும் துளை பயின்ற குழலும் ஒலிக்க; காற்கு ஒசி கொம்பு போலப் போந்து - காற்றுக்கு நுடங்கும் பூங்கொடி போலப் போந்து; தானையை விட்டிட்டு - திரைச்சீலையை விட்டிட்டு; கைத்தலங்கள் காட்டி - கைகளைக் காட்டி; மேற்பட வெருவி நோக்கி ஒல்கி - மேலே வெருவிப் பார்த்து ஒல்கி; முகம் செய்கோலம் தோற்றினாள் 
 | 
  |