| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
394  | 
  | 
|  677 | 
குங்குமச் சாந்து வேய்ந்து |  
|   | 
  குண்டலந் திருவில் வீச |  
|   | 
வங்கதி ரார மின்ன |  
|   | 
  வரிவைகூத் தாடு கின்றாள். | 
 
 
 | 
| 
    (இ - ள்.)செங்கதிர்ச் சிலம்பு செம்பொன் கிண்கிணி சிலம்ப - செவ்வொளிச் சிலம்பும் சிவந்த பொன்னாற் செய்த கிண்கிணியும் ஒலிப்ப; கோதை பொங்க - மாலை ததும்ப; பொன் ஓலை வட்டம் பொழிந்த மின் உகுப்ப - பொன் ஓலை ஒளியை வட்டமாகச் சொரிந்து சிந்த; போர்த்த குங்குமச் சாந்து வேய்ந்து குண்டலம் திருவில் வீச - குண்டலம் மேனியை மறைத்த சந்தனத்தைத் தீண்டி அழகிய ஒளியை வீச; அம் கதிர் ஆரம் மின்ன - அழகிய ஒளியையுடைய முத்துவட மின்ன; அரிவை கூத்தாடுகின்றாள் - அவள் கூத்தாடுகிறாள். 
 | 
( 185 ) | 
|  678 | 
மருங்குலு மொன்று தாய்க்கு மொருமக ளாத லோர்ந்து |  
|   | 
மிரும்பினா லியன்ற நெஞ்சத் திவர்களோ விருந்து காண்க |  
|   | 
வரங்கின்மே லிவளைத் தந்த தாய் கொலோ கயத்தி யன்றேற் |  
|   | 
சுரும்புசூழ் கண்ணி சூட்டி யவர்கொலோ கயவர் செல்லீ்ர். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மருங்குலும் ஒன்று - இடையும் ஒன்றே (இது முரிந்தால் வேறு சேம இடையும் இல்லை); தாய்க்கும் ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும் - இவளும் தாய்க்கு ஒரு மகளே ஆதலை அறிந்தும்; இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க - (அருளின்றாக) இரும்பினால் ஆகிய உள்ளத்தையுடைய இக்கொடியோர் இருந்து காண்க!; அரங்கின் மேல் இவளைத் தந்த தாய் கொலோ கயத்தி? - (இவர்கள் அருளிலராய்க் கூத்து முடியும் வரை காண்பார்களென் றறிந்தும்) இக் கூத்தரங்கிலே இவளை விட்ட தாய் கொடியளோ?; அன்றேல் - அன்றாயின்; சுரும்புசூழ் கண்ணி சூட்டியவர்கொலோ கயவர்? - வண்டுகள் சூழும் கண்ணியைக் குழலிற் சூட்டிவிட்டவர் கொடியரோ? சொல்லீர் - எவர் கொடியரெனக் கண்டு சொல்வீராக! 
 | 
  | 
| 
    (வி - ம்.) இவர்களோ : ஓ : இரக்கக் குறிப்பு. 
 | 
  | 
| 
 இச் செய்யுள், 
 | 
  | 
|   | 
”ஒசிவது போலுநின் ஒசிநுசுப் புணரா | 
  | 
|   | 
தினக்கிடை யிப்புனல் குடைகுவை யாயின் | 
  | 
|   | 
நினக்கிடை மற்றொன் றுடையை யோவெனக் | 
  | 
|   | 
காதற் செவிலி சுழறுபு விலக்கவும்” | 
  | 
| 
    என வரும் பெருங்கதைப் பகுதியை நினைப்பிக்கின்றது. 
 | 
( 186 ) |