காந்தருவ தத்தையார் இலம்பகம் |
396 |
|
(இ - ள்.) தேன் தாமம் செம்பவளத் தாமம் செம்பொன் எரிதாமம் மின்னுத் திரள் தாமங்கள் தாம் தாம் தாம் என - தேனையுடைய பூமாலைதாம், செம்பவள மாலைதாம், விளக்கமுற்ற செம்பொன் மாலைதாம், ஒளிவிடும் மணிமாலை தாம் என்று கண்டோர் கூறும்படி; தாழ்ந்த பொன் மேகலைத்தாம அரங்கின்மேல் - அங்கே பொருந்திய பொன்மேகலையையுடைய தாமம் போன்ற தோரிய மடந்தையர்களுடைய அரங்கின்மேலே; தாதுஆர் முல்லைப் பூந்தாமக் கொம்பு ஆடக் கண்டார் எல்லாம் - தாது பொருந்திய முல்லை மலர்மாலை அணிந்த கொம்பு போன்றவள் ஆடுவதைப் பார்ததவர்கள் எல்லோரும்; புனமயிலே அன்னமே பொன்னங்கொம்பே ஆம் தாமரை மகளே - (இவள்) புனத்திலுள்ள மயிலேயாம், அன்னமேயாம், பொற்கொம்பேயாம், திருமகளேயாம்; அல்லள் ஆயின் அமரர் மகள் என்பாரும் ஆயினார் - அல்லளென்றால் வானவர் மகளேயாம் என்று தனித்தனியே கூறுவாராயினார்.
|
|
(வி - ம்.) தோரிய மடந்தையர்; ஆடி முதிர்ந்தவராய் பற்றுப் பாடுவோர். முல்லை கற்பிற்குச் சூட்டப்பட்டது. 'தானுடை முல்லையெல்லாம்' (சீவக. 686) என்பர் மேலும். இனி இவையே மாலையென்று கண்டார் வியக்கும்படி பூமாலை முதலியன தாழ்ந்த தாம அரங்கின் மேலே மேகலையையும் முல்லைத் தாமத்தையுமுடைய கொம்புபோல் வாள் ஆட என்றுமாம்.
|
|
'ஆயினார்' என்பதனை 'நெய் பருகி' (சீவக. 682) என்னுஞ் செய்யுளின் பின்னே கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
|
|
தேந்தாமம் - பூமாலை. செம்பொன் எரிதாமம் - பொன்மாலை. மின்னுத் திரள்தாமம் - மணிமாலை. பூந்தாமக் கொம்பு - அனங்கமாலை.
|
( 188 ) |
681 |
கொடியார் குளிர்முத்தஞ் சூட்டி வைத்தார் |
|
கொல்வானே குங்குமச்சே றாட்டி னார்க |
|
ளடிசார்ந்து வாழ்வாரை யம்முலைக டாமே |
|
யழித்திடு மேற்றாமே யழித்தி டுகவென் |
|
றொடியாத மாத்திரை யாலுண் டேநுசுப் |
|
பிருந்து காண்பாரு முளரே செங்க |
|
ணெடியான் மகன்சிலையு மம்பும் வைத்த |
|
நிழன்மதியோ வாண்முகமோ நோக்கிக் காணீர். |
|
(இ - ள்.) கொடியார் கொல்வானே குளிர்முத்தம் சூட்டி வைத்தார் - கொடியார்கள் கொல்வதற்கே குளிர்ந்த முத்துக்களைச் சூட்டிவிட்டனர்; குங்குமச் சேறு ஆட்டினார்கள் - குங்குமக் குழம்பாலே ஆட்டிவிட்டனர்; அடிசார்ந்து வாழ்வாரை அம்
|
|