காந்தருவ தத்தையார் இலம்பகம் |
397 |
|
முலைகள் தாமே அழிந்திடுமேல் தாமும் அழித்திடுக - தம் அடிக்கீழ்ப் பொருந்தி வாழ்வாரை (உலகம் அழிப்பதுண்டாயின்) அம் முலைகளும் நம்மை அழிக்க அமையும்; என்று ஒடியாத மாத்திரையால் நுசுப்பு உண்டே - என்று கருதித் தான் முறியாத அளவிலே இடையும் இருந்தது; காண்பாரும் உளரே - இப்பாவத்தைக் கண்ணாற் காண்பாரும் இருந்தனரே!; செங்கண் நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த - சிவந்த கண்களையுடைய திருமாலின் மகனாகிய காமன் தன் வில்லையும் அம்பையும் வைத்த; நிழல் மதியோ வாள்முகமோ நோக்கிக் காணீர் - ஒளிவிடும் திங்களோ? முகமோ? கூர்ந்து நோக்குவீர்!
|
|
(வி - ம்.) பிறர்க்கின்னா செய்வார் என்பது தோன்றக் கொடியா என்றார். அழித்திடுமேல் என்பதற்கு உலகம் என்னும் எழுவாய்
வருவித்துக் கொள்க.
|
|
இருந்து காண்பாரும் என்பது இக் கொடுமையை நேரிலிருந்து கண்ணாரக் காண்பவரும் என்பதுபட நின்றது.
|
|
நெடியான் மகன்சிலை - கரும்புவில். இது புருவத்திற்குவமை. அம்பு - மலரம்பு. இது கண் வாய் இரண்டிற்கும் உவமை என்க.
|
( 189 ) |
682 |
நெய்பருகி நீண்டஇருட் கற்றை போலுங் |
|
குழற்கற்றை கண்டு நிறைக லங்குவார் |
|
மைபருகி நீண்டு மதர்த்த வுண்கண் |
|
வாளேறு பெற்று நைவா மாநா கத்தின் |
|
பைபருகு மல்கு லிலயம் பற்றிப் |
|
பதனமைத்த பாவை நிருத்த நோக்கி |
|
மெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகிக் காம |
|
வெயில்வெண்ணெய்ப் பாவைபோன் மெலிகின் றாரே. |
|
(இ - ள்.) நெய்பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல் கற்றை கண்டு நிறைகலங்குவார் - நெய் பூசப்பெற்று, நீண்ட இருளின் கொத்தே போலும் குழற் கொத்தைப் பார்த்து நிறைகெடுவார்; மை பருகி நீண்டு மதர்த்த - மைதீட்டப்பெற்று நீண்டு களிப்புற்ற; உண்கண் வாளேறு பெற்று நைவார் - கண்களாகயி வாளால் தாக்குதல் பெற்று வருந்துவார்; மா நாகத்தின் பை பருகும் அல்குல் பாவை - பெரிய பாம்பின் படத்தின் தன்மையைக் கொள்ளும் அல்குலையுடைய பாவையின்; இலயம் பற்றிப் பதன் அமைத்த நிருத்தம் நோக்கி - தாள அறுதியைப்பற்றிக் கால் அமைத்த கூத்தினைப் பார்த்து; மெய்உருகிக் கண் உருகி நெஞ்சு உருகி - மெய்யும் கண்ணும் உளமும் உருகி; காமவெயில் வெண்ணெய்ப் பாவைபோல் மெலிகின்றார் - காமமாகிய வெயிலிலே யுள்ள வெண்ணெய்ப் பாவைபோல மெலிகின்றனர்.
|
|