பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 398 

   (வி - ம்.) நெய்பருகி நீண்ட குழல், இருட்கற்றை போலும் குழல் எனத் தனித்தனிக் கூட்டுக. உண்கண் - மையுண்ட கண். இலயம் - தாளவறுதி. பதன் - பதம்; அடி, பாவை - அநங்கமாலை. நிருத்தம் - கூத்து. கண்ணுருகுதல் - நீர்வார்தல்.

( 190 )
683 ஆடவர் மனங்க ளென்னு மரங்கின்மே லனங்க மாலை
யாடினாண் முறுவ லென்னுந் தோழியை யையன் காண
வோடரி நெடுங்க ணென்னு மோலையை யெழுதி விட்டாள்
வாடிய வாறு நோயு முரைத்துவார் கொடிய னாளே.

   (இ - ள்.) ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின்மேல் அனங்கமாலை ஆடினாள் - ஆடவரின் உள்ளங்கள் என்னும் அரங்கில் அனங்கமாலை ஆடினாள்; வார்கொடி அனாள் - நீண்ட கொடி போன்ற அவள்; வாடிய ஆறும் நோயும் உரைத்து - தான் வாட்டமுற்றதையும் அதற்குக் காரணமான நோயையும் உரைத்து; ஓடு அரி நெடுங்கண் என்னும் ஓலையை எழுதி - நீண்ட செவ்வரி பரவிய நெடுங்கண்களாகிய ஓலையை எழுதி; முறுவல் என்னும் தோழியை - (அதனை) முறுவல் என்னும் தோழியினிடம் கொடுத்து அவளை; ஐயன் காண விட்டாள் - சீவகன் காணுமாறு விடுத்தனள்.

 

   (வி - ம்.) தன் கூத்தினால் அவற்கு வேட்கை நிகழ்ந்ததோ என்று நோக்குகின்றவள் தான் குறித்தன கொள்வானாக நோக்கினமையை உருவகமாகக் கூறினார், அதனை அவன் கொள்ளாமை கண்டு நாடக மகளாதலின், தன் நெஞ்சு வருந்தாதபடி அதனைத் தேற்றுகின்றாளாக மேற் செய்யுளிற் கூறுகின்றார்; மாதவி, 'மாலை வாராராயினும் மாணிழை - காலை காண்குவம்' (சிலப்-8: 115-6) என்றாற் போல.

 

   ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின்மேல் என்பது அக் கூத்தாடரங்கின்கண் ஆடுதலே அன்றியும் என்பதுபட நின்றது.

 

   முறுவலாலே அவனைத் தன்னை நோக்குமாறு செய்தலின் அதனைத் தோழி என்றார். தன் கண்ணாற் றன் கருத்தை அவனுக்குணர்த்தலின அதனை ஓலை என்றார்.

( 191 )
684 வளமல ரணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன்
களனெனக் கரையு மல்குல் கையினாற் றீண்டப் பெற்றே
னிளமுலை சுமந்து பெற்ற வருத்தமு மின்று தீர்ந்தே
னுளமெலி மகளி ரெய்து மின்பமு மின்று பெற்றேன்.

   (இ - ள்.) வளமலர் அணியப் பெற்றேன் - செழுவிய மலர்களை அணியப் பெற்றேன்; வாள்வளை திருத்தப் பெற்றேன் - வெள்ளிய வயல்களைத் திருத்தவும் பெற்றேன்; களன் எனக் கரையும் அல்குல் கையினால் தீண்டப் பெற்றேன் - களன் என்று மேகலை ஒலிக்கும் அல்குலை (மேகலை ஆடை முதலானவற்றை