காந்தருவ தத்தையார் இலம்பகம் |
399 |
|
அணியும்போது) கையால் தொடவும் பெற்றேன்; இளமுலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன் - (சந்தனம் மாலை முதலியன அணிந்து கச்சிறுக்கி விட்டதனால்) இளமுலைகளைச் சுமந்துகொண்ட துன்பமும் இன்று நீங்கினேன்; உளம்மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன் - (ஊடலால்) உள்ளம் மெலிகின்ற மகளிர் (ஊடல் தீர்ந்தபின்) அடையும் இன்பமும் இன்றே அடைந்தேன்.
|
|
(வி - ம்.) முன்னர் முறுவலாகிய தோழியின் வாயிலாகக் கண்களாகிய ஓலையை விடுத்தாள். அவள் நோக்கிற்கும் முறுவலுக்கும் எதிர் நோக்கும் முறுவலும் பெறாமையின் தன்னை அவன் விரும்பாமை உணர்ந்த அவள் தன் உளத்தைத் தேற்றுவதற்கு இங்ஙனங் கூறிக் கொண்டாள்.
|
|
களனென - ஒலிக்குறிப்புச் சொல்; 'கலீரென' என்று பிற்காலத்தே இதனை வழங்குவர். கரையும் - ஒலிக்கும். குருதிச் சாந்து முதலியன அவன் அணிந்தபொழுது இவை அவனாற் றீண்டப் பெற்றுப் பயனுடையன ஆயின
|
|
என்பாள் இளமுலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன் என்றாள.்
|
( 192 ) |
685 |
என்றவ ளரசன் றன்னை |
|
நோக்கல ளிவன்க ணார்வஞ் |
|
சென்றமை குறிப்பிற் றேறிக் |
|
கூத்தெலா மிறந்த பின்றை |
|
நின்றது மனத்திற் செற்ற |
|
நீங்கித்தன் கோயில் புக்கான் |
|
மன்றல் மடந்தை தன்னை |
|
வலிதிற்கொண் டொலிகொ டாரான். |
|
(இ - ள்.) என்றவள் அரசன் தன்னை நோக்கலன் - என்று நினைத்தவள் அரசனை நோக்காளாயினள்; ஒலிகொள் தாரான் - வண்டுகளின் ஒலி பெற்ற மாலையானாகிய கட்டியங்காரன்; இவன்கண் ஆர்வ சென்றமை குறிப்பில் தேறி - சீவகனிடம் அவளுடைய விருப்பம் சென்றதைக் குறிப்பினால் உணர்ந்து; கூத்தெலாம் இறந்தபின்றை - கூத்தெலாம் முடிந்த பின்பு; மனத்தில் செற்றம் நின்றது - உள்ளத்திலே சீவகனிடம் செற்றம் நிலைபெற்றதாக; மன்றல் மடந்தை தன்னை வலிதிற் கொண்டு - மணத்திற்குரிய அனங்கமாலையை அவள் விருப்பமின்றியே கைப்படுத்திக் கொண்டு; நீங்கித் தன் கோயில் புக்கான் - அரங்கை விடுத்துத் தன் அரண்மனை சென்றான்.
|
|
(வி - ம்.) செற்றம் - நீங்காச் சினம். அது சீவகனைக் கொல்ல வேண்டுமென்பது. மன்றல்: அ: அசை.
|
( 193 ) |