| நாமகள் இலம்பகம் |
40 |
|
|
சாற்றைப் பாகுசெலுத்தக் காய்ச்சும்போது உண்டான இனிய புகை ; விண்பரந்து புகுதலின் பருதி சேந்தது - வானத்திற் பரவிச் செல்வதால் ஞாயிறு சிவந்தது.
|
|
|
(வி - ம்.) இனிக். கரும்பின் செய்தி கூறுகின்றார்.
|
|
|
எல்லாம் என்பது இருதிணைக்கும் பொது. பருகுதலின் திருந்திற்று.
|
|
|
இனி, இங்ஙனம் 1.ஒருக்கின பண்டங்களைக் கொண்டுபோகின்றமை கூறுகின்றார்.(கண் - கணு.)
|
( 31 ) |
| 61 |
கிணைநிலைப் பொருநர்தம் செல்லல் கீழ்ப்படப் |
| |
பணைநிலை யாய்செநெற் பகரும் பண்டியும் |
| |
கணைநிலைக் கரும்பினிற் கவரும் பண்டியும் |
| |
மணநிலை மலர்பெய்து மறுகும் பண்டியும், |
|
|
(இ - ள்.) கிணைநிலைப் பொருநர்தம் செல்லல் கீழ்ப்படப் பணைநிலை ஆய் செந்நெல் பகரும் பண்டியும் - (உழவர்) கிணைப் பொருநருடைய வறுமை நீங்கக் கொடுத்து, மிக்க நெல்லைப் பண்ணையிலிருந்து விற்றற்குக் காரமாண பண்டியும்; கணைநிலைக கரும்பினில் கவரும் பண்டியும் - கணைநிலைக கரும்பினில் கவரும் பண்டியும் - திரட்சியைப்பெற்ற கரும்புலிருந்து பாகு முதலியன கொண்டுபோகும் பண்டியும்; மணம்நிலை மலர்பெய்து மறுகும் பண்டியும் - மணம் நிலைபெற்ற மலர்களை யிட்டுக்கொண்டு போகும் பண்டியும்;
|
|
|
(வி - ம்.) இதுமுதல் மூன்று கவியும் ஒரு தொடர். பண்ணை - 'பணை' என ஆனது விகாரம். நிலை - நிலைபெறுதல். கணை - திரட்சி, செல்லல்-துன்பம். கிணைப்பொருநர் : வேளாளரைப் புகழ்ந்து பாடுவோர். கிணை : தடாரி என்னும் ஒருவகைப் பறை. இவர்கள் ஏர்க்களம் பாடும் பொருநர். கவரும் - ஏற்கும். பண்டி - வண்டி.
|
( 32 ) |
| 62 |
மல்லலந் தெங்கிள நீர்பெய் பண்டியு |
| |
மெல்லிலைப் பண்டியுங் கமுகின் மேதகு |
| |
பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியு |
| |
மொல்குதீம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும், |
|
|
(இ - ள்.) மல்லல் அம் தெங்கு இளநீர் பெய்த பண்டியும் - வளமிகும் அழகிய இளநீரைப் பெய்த பண்டியும் ; மெல்இலைப் பண்டியும் - வெற்றிலை பெய்த பண்டியும் ; கமுகின் மேதகு பல்பழுக்காய்க்குலை பெய்த பண்டியும் - கமுகிலிருந்து கிடைத்த சிறப்புமிகும் பல பழுக்காய்களை இட்ட பண்டியும் ; ஒல்கு தீம்
|
|
|
|
1. ஒருக்கின - ஒன்று சேர்த்த.
|
|