காந்தருவ தத்தையார் இலம்பகம் |
400 |
|
686 |
தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் |
|
தாமரைப் போது புல்லி |
|
யூனுடை யுருவக் காக்கை |
|
யிதழுகக் குடைந்திட் டாங்குக் |
|
கானுடை மாலை தன்னைக் |
|
கட்டியங் காரன் சூழ்ந்து |
|
தானுடை முல்லை யெல்லாந் |
|
தாதுகப் பறித்திட் டானே. |
|
(இ - ள்.) உடைந்த தேன் ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி - அரும்பலர்ந்து தேன் பெருகும் செவ்வியிலுள்ள தாமரை மலரைத் தழுவி் ; ஊன் உடை உருவக் காக்கை இதழ் உகக் குடைந்திட்டாங்கு - ஊன் வற்றிய உருவமுள்ள காக்கை அதன் இதழ்கள் விழுமாறு குடைந்திட்டாற் போல; கான் உடைமாலை தன்னைக் கட்டியங்காரன் சூழந்து - மணமிகும் அனங்கமாலையைக் கட்டியங்காரன் முற்றுகை செய்து; தான் உடை முல்லை யெல்லாம் தாது உகப் பறித்திட்டானே - அவளுடைய முல்லையை யெல்லாம் தாதுகள் சிதறப் பறித்து விட்டான்.
|
|
(வி - ம்.) ஊன் வற்றிய உருவக் காக்கை - வயது முற்றிய வலியற்ற காக்கை; கட்டியங்காரனின் முதுமையைக் குறிக்கிறது. அல்லது ஊனை உடைக்கும் உருவக் காக்கை என்றும் கூறலாம். முல்லை - கற்பு. இதனாற் புணரும் நெறியறியாமை கூறினார்.
|
( 194 ) |
687 |
கலையினிற் கன்னி நீக்கித் |
|
தாமரைக் கண்க டம்மான் |
|
முலையினி லெழுதிச் செவ்வாய் |
|
பயந்ததேன் பருகி முள்கும் |
|
சிலைவலாய் புல்லு நம்பி |
|
சீவக சாமியோ என் |
|
றலைகடற் புலம்பி னோவா |
|
தரற்றுமா லணங்கி னன்னாள். |
|
(இ - ள்.) கலையினில் கன்னி நீக்கி - மேகலையிடத்து அழிவின்மையை நீக்கி; தாமரைக் கண்கள் தம்மால் - தாமரை மலரனைய கண்களால்; முலையினில் எழுதி - முலைகளில் எழுதி; செவ்வாய் பயந்த தேன் பருகி - செவ்வாய் ஈந்த தேனைப் பருகி; முள்கும் சிலைவலாய்! - முயங்கும் சிலைவல்லானே; சீவகசாமியோ! - சீவகசாமியோ!; நம்பி! - நம்பியே!; புல்லு என்று - தழுவிக்கொள்
|
|