காந்தருவ தத்தையார் இலம்பகம் |
401 |
|
என்றுரைத்து; அணங்கின் அன்னாள் - தெய்வப் பெண் போன்றவள்; அலைகடல் புலம்பின் ஓவாது அரற்றும் - அலைகடலொலி போல இடைவிடாமல் அரற்றுவாளாயினள்.
|
|
(வி - ம்.) 'சிலைவலாய்!' எனவே இத் துன்பம் நீக்குதற்குரியாய் என்றாள். உருவு வெளிப்படுதலிற் புல்லென்றாள். சீவகசாமியோ : சேய்மை விளி. ஓ: இரக்கக் குறிப்பும் ஆம்.1.
|
|
கண்களால் முலையினில் எழுதுதலாவது - அவையிற்றின் எழிலைக் கண்ணாலே நெடிது கூர்ந்து நோக்கி இன்புறுதல். முள்கும் - தழுவும்.
|
( 195 ) |
688 |
பிறனல மரற்றக் கேட்டும் |
|
பீடினாற் கனிந்த காம |
|
நறுமல ரணிந்த மாலை |
|
நாற்றக்கோர் நான்கு காதம் |
|
உறநடந் தறித லில்லா |
|
னொண்டொடிக் குருகிப் பின்னுந் |
|
திறனல தமர்க்குச் செப்புந் |
|
தீயுமிழ்ந் திலங்கும் வேலான். |
|
(இ - ள்.) தீ உமிழ்ந்து இலங்கும் வேலான் - அனல் சொரிந்து விளங்கும் வேலானும்; பீடினால் கனிந்த காம நறுமலர் அணிந்த மாலை நாற்றக்கு - பெருமையாற் பழுத்த காமமாகிய நறுமலராலே புனையப் பெற்ற மாலையினது மணத்திற்கு; ஓர் நான்கு காதம்உற நடந்து அறிதல் இல்லான் - ஒரு நான்கு காத வழியளவும் பொருந்த நடந்தறியாதவனும் ஆகிய கட்டியங்காரன்; பிறன் நலம் அரற்றக் கேட்டும் - வேறொருவன் அழகை எடுத்துக்கூறிப் புலம்புவது கேட்டும்; பின்னும் ஒண்தொடிக்கு உருகி - மேலும் அவ்வொள்ளிய தொடியாளை நினைந்து உருகி; தமர்க்குத் திறன் அலசெப்பும் - தன் அமைச்சரிடம் தகவற்ற மொழிகளைசக் கூறுகிறான்.
|
|
(வி - ம்.) காமநெறியறியாதவன் என்பது கருத்து. மாலை: காமமென் மாலை. அன்றி, அனங்கமாலையும் ஆம்.
|
( 196 ) |
|
1. இதற்குப் பின்னர்ச் சில ஏட்டுப் பிரதிகளில் உள்ள செய்யுள்:-
|
|
”இந்நகர் தனக்கு மன்னன் யாரெனக் கியம்பு மாதே
|
|
மன்னிய வணிகன் மைந்தன் சீவகன் தானோ என்னே
|
|
உன்னிய நெஞ்சுங் கண்ணும் ஒருங்குடன் அவனுக் கானாய்
|
|
என்னை நீ மனத்துள் வையாக் காரணம் யாதோ என்றான்.”
|
|