பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 402 

வேறு

 
689 விலங்க லன்ன வேக வேழ
  நான்கும் வெல்லு மாற்றலன்
கலங்க லந்தி லங்கு மார்பிற்
  கந்து கன்ம கன்னென
நலங்க லந்து ரைக்கு மாலிந்
  நன்ன கர்க்கு மன்னனோ
வுலங்க லந்த தோளினீரு
  ரைமி னீவி ரென்னவே.

   (இ - ள்.) உலம் கலந்த தோளினீர் - கற்றூணின் திண்மை கலந்த தோளையுடையீர்!; கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன் மகன் - பூண் கலந்து விளங்கும் மார்பையுடைய கந்துகன் சிறுவன்; விலங்கல் அன்ன வேக வேழம் நான்கும் வெல்லும் ஆற்றலன் என - மலையனைய விரையும் திசைக்களிறுகள் நான்கையும் வெல்லும் வலிமையுடையான் என்று; நலம் கலந்து உரைக்கும் - உலகம் அவனுடைய தகவைக் கூறும்; இந் நல் நகர்க்கு மன்னனோ - இந்த அழகிய நகருக்கு அவன் அரசனோ?; நீவிர் உரைமின் என்ன - நீங்கள் உரைப்பீராக என்று வினவ,

 

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.

 

   உரைக்கும் என்னும் பயனிலைக்கு உலகம் என்னும் எழுவாய் வருவித்தோதுக; மார்பின் மகன் கந்துகன் மகன் எனத் தனித் தனிக் கூட்டுக.

( 197 )
690 மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர்
தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி னேந்தி யாடினா
னொட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினை
விட்ட லர்ந்த போது போல வேந்த லேந்தி நீக்கினான்.

   (இ - ள்.) மட்டு அவிழ்ந்த தாரினான் - தேன் விரிந்த மாலையினான்; இம் மா நகர்க்குள் ஆயிரர்தொட்டு எடுக்கலா உலம் - இப் பெரு நகரிலே ஆயிரவர் தீண்டியெடுக்க இயலாத கல்லுருண்டையை; ஓர் தோளின் ஏந்தி ஆடினான் - ஒரு தோளிலே ஏந்தி ஆடினான்; ஓர் இரண்டு நாகம் எடுக்கலாத கல்லினை - இரண்டு களிறுகள் எடுக்க முடியாத கல்லை; ஒட்டி விட்டு அலர்ந்த போதுபோல - சூளுரைத்து முறுக்கலர்ந்த மலர் போல (எளிதாக), ஏந்தல் ஏந்தி நீக்கினான் - அச் சிறப்புடையான் எடுத்து எறிந்தான்.