பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 403 

   (வி - ம்.) 'நாகம் ஓரிரண்டு எடுக்கலாத கல்' என்பதற்கு 'நாகம் எடுக்கலாத ஓரிரண்டு கல்' என மொழிமாற்றியுரைப்பர் நச்சினார்க்கினியர்.

 

   இதுமுதல் மூன்று பாடல் அமைச்சர் கூற்றைக் கொண்டு கூறியவாறு.

( 198 )
691 வெஞ்சி லையின் வேடர் வெள்ள மப்பு மாரி தூவலி
னெஞ்ச லின்றி நம் படையி ரும்மு றையு டைந்தபின்
மஞ்சு சூழ்க ணைம்ம ழைபொ ழிந்து மாநி ரைபெயர்த்
தஞ்சி லோதி யார் புனைந்த செஞ்சொன் மாலை சூடினான்.

   (இ - ள்.) வெஞ்சிலையின் வெள்ளம் அம்பு மாரி வேடர் எஞ்சலின்றித் தூவலின் - கொடிய வில்லிலிருந்து வெள்ளம் போன்ற அம்பு மழையை வேடர் இடைவிடாமல் தூவியதனால்; நம் படை இருமுறை உடைந்த பின் - நம்முடைய படை இரண்டு முறை தோற்ற பிறகு; மஞ்சுசூழ் மழைக் கணை பொழிந்து மாநிரை பெயர்த்து - முகில் சூழ்ந்து பெய்யும் மழைபோல அம்புகளைப் பொழிந்து பெருநிரைகளைத் திருப்பிக் கொணர்ந்து; அம்சில் ஓதியார் புனைந்த செம்சொல் மாலை சூடினான் - அழகிய சிலவாகிய கூந்தலார் அணிந்த நல்ல சொல் மாலைகளைப் புனைந்தான்.

 

   (வி - ம்.) ஒற்றுமை நயங்கருதி ஆயர்படை உடைந்தமையையுங்கூட்டி நம்படை இருமுறை உடைந்தது என்றார் என்க.

( 199 )
692 தீம்பயறி யன்ற சோறு செப்பி னாயி ரம்மிடா
நீங்க லாந றுந்நெய் வெள்ளங் கன்ன லாயி ரங்குட
மேந்துவித்து நாமி சைய வந்து தமந்து நீக்கினா
னாங்குநாம்ப சித்தசைந்த காலை யன்ற வண்ணலே.

   (இ - ள்.) செப்பின் அன்று ஆங்கு நாம் பசித்து அசைந்த காலை - கூறுமிடத்து அன்று அவ்விடத்தே நாம் பசித்துச் சோர்ந்த பொழுது; அ அண்ணல் - அத் தலைவனாகிய சீவகன ; தீம் பயறு இயன்ற சோறு ஆயிரம் மிடா - இனிய பருப்புச் சோறு ஆயிரம் மிடாவும்; நீங்கலா நறுநெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம் - நீங்காத மணமுடைய நெய் வெள்ளமும் கருப்பஞ்சாறும் ஆயிரமாயிரங் குடமும்; ஏந்து வித்து வந்து நாம் மிசையத் தந்து நீக்கினான் - சுமந்துவரச் செய்து வந்து நாம் உண்ணக் கொடுத்துப் பசியைப் போக்கினான்.

 

   (வி - ம்.) இதனால்,

 
  ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை  
  செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்.110)