காந்தருவ தத்தையார் இலம்பகம் |
404 |
|
என்னும் அறத்தினை அமைச்சர் கட்டியங்காரனுக்குக் குறிப்பாற் கூற முயறலை உணரலாம். மேலும் அமைச்சர் முதலியோர் அவனை உள்ளத்தே வெறுத்துப் புறமே நட்டொழுகுதலையும் உணரலாம்.
|
( 200 ) |
693 |
இன்ன னென்ன வின்பு றானிழந்த னன்ன ரசென |
|
வென்னை வெளவு வாயில்தா னென்னுஞ் சூழ்ச்சி தன்னுளா |
|
னன்ன தால ரிறப வறிந்து கூத்தி கூறினா |
|
ளின்ன தாற்ப டையமைத் தெழுமி னென்றி யம்பினான். |
|
(இ - ள்.) இன்னன் என்ன இன்பு உறான் - இத் தன்மையன் என்று அமைச்சர் கூறவும் மகிழா தவனாய்; அரசு இழந்தனன் என - இனி நான் அரசிழந்தேன் என்று உட்கொண்டு; வெளவும் வாயில்தான் என்னை என்னும் - சீவகனை அகப்படுக்கும் வழிதான் என்னையோ என்கிற; சூழ்ச்சி தன்னுளான் - சூழ்ச்சியிலே இருக்கிறான்; அன்னது ஆதல் - அவன் கருத்து அவ்வாறு இருத்தலை; அரில்தப அறிந்து கூத்தி கூறினாள் - குற்றமின்றி அறிந்து நாகமாலை கூறினாள்; இன்ன தால் - இப்படியிருப்ப தால்; படை அமைத்து நீவிர் எழுமின் என்று இயம்பினான் - நீங்கள் படை திரட்டி எழுவீர்களாக என்று கந்துகன் கூறினான்.
|
|
(வி - ம்.) [நச்சினார்க்கினியர், 'சூழ்ச்சி தன்னுளான்' என்பதன் பின் 'இதுபட்டது என்றாள்' என்று, 670-71-ஆம் செய்யுளில் உள்ள சொற்களைக் கொணர்ந்து கூட்டி இச் செய்தியை ஓலை கொண்டு வந்தவள் கூற்றாக்குவர். அதற்காக 667 முதல் 693 வரை ஒரு தொடராக்கிக் கொண்டு கூட்டுவர். அது பொருத்தமன் றென்பதை முன்னர் 671 ஆம் செய்யுளில் உரைத்தாம்.]
|
( 201 ) |
வேறு
|
|
694 |
தாதைதா னுரைத்த வெல்லாந் |
|
தன்னுயிர்த் தோழன் கூறக் |
|
கோதைமுத் தணிந்த மார்பன் |
|
கூரெயி றிலங்க நக்காங் |
|
கேதமொன் றில்லை சேறு |
|
மென்றலு மிலங்கு வாட்கைப் |
|
போதுலாங் கண்ணி மைந்தர் |
|
போர்ப்புலிக் குழாத்திற் சூழ்ந்தார். |
|
(இ - ள்.) தாதைதான் உரைத்த எல்லாம் - கந்துகன் கூறிய எல்லாவற்றையும்; தன் உயிர்த் தோழன் கூற - அவன் உயிர் நண்பன் உரைக்க; கோதை முத்து அணிந்த மார்பன் - பூமாலையும் முத்துமாலையும் அணிந்த மார்பனான சீவகன்; கூர்
|
|