பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 406 

மணம் பெற ஊட்டி; வரிநிற வண்ணமாலை வலம்பட மிலைச்சி - வண்டின் பாட்டு நிறமுடைய அழகிய மாலையை அக் குஞ்சியிலே பொருந்த அணிந்து; வாள் ஆர் திருநிற முகத்திற்கு ஏற்ப - ஒளி பொருந்திய அழகிய நிறமுற்ற முகத்திற்குத் தக; ஓர் செம்பொன் ஓலை சேர்த்தி - (ஒரு காதில்) ஒரு நல்ல பொன்னோலையை அணிந்து; ஓர் காதிற்கு எரிநிறக் குழை இருள் அறச் சுடர வைத்தான் - ஒரு காதிலே தீநிறக் குழையை இருள் நீங்க ஒளிருமாறு அணிந்தான்.

 

   (வி - ம்.) வரிநிற வண்ணமாலை என்பதற்கு, வண்டின் நிறம் போன்ற நிறமுடைய மணிமாலை எனினுமாம். ”வண்டினது பாட்டின் நிறத்தையுடைய மாலை” என்பர் நஞ்சினார்க்கினியர்.

( 204 )
697 தென்வரைப் பொதியிற் றந்த
  சந்தனத் தேய்வை தேங்கொண்
மன்வரை யகலத் தம்பி
  வலம்புரி யாரந் தாங்கி
மின்விரித் தனைய தொத்து
  விலைவரம் பறிய லாகா
வின்னுரைக் கலிங்க மேற்ப
  மருங்குலுக் கெழுதி வைத்தான்.

   (இ - ள்.) தென் வரைப் பொதியில் தந்த சந்தனத் தேய்வை - தெற்கில் எல்லையாகிய பொதியமலை தந்த சந்தனக் குழம்பை; தேன்கொள் மன் வரை அகலத்து அப்பி - (கண்ணுக்கு) இனிமை கொண்ட பெருமையுற்ற மலைபோலும் மார்பிலே பூசிக்கொண்டு; வலம்புரி ஆரம் தாங்கி - வலம்புரி யீன்ற முத்துமாலை அணிந்து; மின்விரித்த அனையது ஒத்து - மின்னை அகலமாக விரித்தாற் போன்று; விலை வரம்பு அறியல் ஆகா - விலையளவு அறிய இயலாத; இன்நுரைக் கலிங்கம் மருங்குலுக்கு ஏற்ப - இனிய நுரையைப் போன்ற ஆடையை இடைக்குத் தக; எழுதி வைத்தான் - எழுதினாற் போல உடுத்தான்.

 

   (வி - ம்.) எழுதிவைத்தான் - எழுதினாற்போல உடுத்தான் என்க. தென்வரைப் பொதியில் - தென்றிசைக்கண் உள்ள மலையாகிய பொதியில்.

( 205 )
698 இரும்பறக் கழுவி யெஃகி னிருளற வடிக்கப் பட்ட
வரும்பெறற் சுரிகை யம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப்
பெருந்தகைக் குருசில் கொண்டு பெருவலஞ் சுடர வீக்கித்
திருந்திழை மகளிர் வெஃகுந் தேவிளங் குமர னொத்தான்.