காந்தருவ தத்தையார் இலம்பகம் |
410 |
|
(வி - ம்.) மனம் பொலிவு: மனப் பொலிவு: விகாரம். சீவகன் பொலிவு கட்டியங்காரன் மனத்தைக் கெடுத்ததென்க. மத்திகை யென்றலின் கைப்பிடி கூறினார்; கையில் இருக்கும் என அடை கூறினார் எனலுமாம்.
|
|
தெரியலான் - ஈண்டுக் கட்டியங்காரன். அழுக்காறுடையயோர்க்கு மாற்றார் செல்வம் காண்டலே பெருந்துன்பமாதலின், அவன்மனத்தைத் தன் பொலிவாலே அறாவினான் என்றார். அறாவுதல் - ஈண்டு அடித்தல் என்னும் பொருட்டாய் நின்றது.
|
( 211 ) |
704 |
குனிகொள் பாக வெண்மதிக் கூரி ரும்பு தானுறீ இப் |
|
பனிகொண் மால்வ ரையெனப் படும தக்களிறீஇ |
|
இனிதி ழிந்தி ளைய ரேத்த வின்ன கிற்கொ ழும்புகை |
|
முனிய வுண்ட குஞ்சியான் முரண்கொண் மாட முன்னினான். |
|
(இ - ள்.) இன் அகில் கொழும்புகை முனிய உண்ட குஞ்சியான் - இனிய மணமுறும் அகிலின் நல்ல புகை வெறுக்கப் பயின்ற சிகையினான்; குனி கொள் பாகம் வெண்மதிக் கூர் இரும்பு உறீஇ - வளைவு கொண்ட, வெண்மதியின் பாகமே போன்ற கூரிய தோட்டியை அழுத்தி; பனிகொள் மால்வரையென மதம்படு களிறு இெரீஇ - நீர் துளிக்கும் பெரமலை போன்ற மதஞ் சொரியும் யானையை இருத்தி; இளையர் ஏத்த இனிது இழிந்து - இளைஞர்கள் வாழ்த்த இனிதாக இறங்கி; முரண்கொள்மாடம் முன்னினான் - யாழினால் மாறுபட்ட மண்டபத்தை அடைந்தான்.
|
|
(வி - ம்.) 'குனிவு' என்பது விகாரமுற்றுக் 'குனி' என வந்தது.
|
|
குனிகொள் பாக வெண்மதிக் கூரிரும்பு என்றது யானைத்தோட்டியை. தோட்டியைச் செருகி என்றவாறு. தோட்டியை யானையின் செவியிலே செருகி வைத்தல் வழக்கம். இெரீஇ - இருத்தி; நிறுத்தி. யாழ்ப்போர் நிகழ்தல் பற்றி முரண்கொள் மாடம் என்றார்.
|
( 212 ) |
705 |
புதிதி னிட்ட பூந்தவிசி னுச்சி மேல்ந டந்தவண் |
|
புதிதி னிட்ட மெல்லணைப் பொலிந்த வண்ணம் போகுயர் |
|
மதிய தேறி வெஞ்சுடர் வெம்மை நீங்க மன்னிய |
|
வுதய மென்னு மால்வரை யுவந்தி ருந்த தொத்ததே. |
|
(இ - ள்.) புதிதின் இட்ட பூந்தவிசின் உச்சிமேல் நடந்து - புதிதாக இட்ட பூந்தவிசின் மேலே நடந்து சென்று; அவண் புதிதின் இட்ட மெல்அணைப் பொலிந்த வண்ணம் - ஆங்குப் புதிதாக இட்ட மெல்லிய அணையின் மேல் பொலிவுடன் இருந்த தன்மை; போகுஉயர் மதியது ஏறி - மிகவுயர்ந்த மதியத்தின் மேல் ஏறி; வெஞ்சுடர் வெம்மை நீங்க மன்னிய - ஞாயிறு தன் வெம்மை நீங்குதற்குப் பொருந்திய; உதயம் என்னும் மால்வரை
|
|