காந்தருவ தத்தையார் இலம்பகம் |
413 |
|
வேறு
|
|
710 |
குட்டநீர்க் குவளை யெல்லாங் |
|
கூடிமுன் னிற்க லாற்றாக் |
|
கட்டழ கமைந்த கண்ணா |
|
ணிறையெனுஞ் சிறையைக் கைபோ |
|
யிட்டநாண் வேலி யுந்திக் |
|
கடலென வெழுந்த வேட்கை |
|
விட்டெரி கொளுவ நின்றா |
|
ளெரியுறு மெழுகி னின்றாள். |
|
(இ - ள்.) குட்டம்நீர்க் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றாக் கட்டழகு அமைந்த கண்ணாள் - அழமான நீரிலுள்ள குவளை மலர்கள் எல்லாம் கூடினாலும் முன் நிற்க இயலாத பேரழகுடைய கண்ணினாளாகிய தத்தை; நிறை எனும் சிறையைக் கைபோய் - நிறை என்னும் காவலைக் கடந்து; இட்ட நாண்வேலி உந்தி - இடப்பட்டிருந்த நாணாகிய வேலியை நீக்கி; கடல் என எழுந்த வேட்கை - கடல்போல எழுந்த வேட்கையாகிய; எரிவிட்டு கொளுவ நின்றாள் - எரி கொழுந்துவிட்டுப் பற்றிக் கொள்ள நின்றவள்; எரியுறும் மெழுகின் நின்றாள்- தீயில் உற்ற மெழுகைப் போல நின்றாள்.
|
|
(வி - ம்.) அவள் உள்ளம் சோர்ந்ததற்கு எரியுறும் மெழுகு உவமம். இது 1.கைம்மிகல் என்னும் மெய்ப்பாடு. கண்ணாள் வேட்கைஎரி கொளுவ அவ்வெரியுறு மெழுகின் நின்றாள் என்க.
|
( 218 ) |
711 |
நலத்தைமத் தாக நாட்டி நல்வலி யிளமை வாராக் |
|
குலப்பிறப் பொன்னுங் கையாற் கோலப்பா சங்கொ ளுத்திக் |
|
கலக்கியின் காமம் பொங்கக் கடைந்திடு கின்ற காளை |
|
யிலைப்பொலி யலங்கன் மார்ப மியைவதென் றாகுங் கொல்லோ. |
|
(இ - ள்.) நலத்தை மத்தாக நாட்டி - இயற்கை அழகைமத்தாக நிறுத்தி; நல்வலி இளமை வார்ஆ - நல்ல வலிமையும் இளமையும் அம் மத்தின் இருபக்கமும் பூட்டும் கயிறுகளாகக் கொண்டு; குலப்பிறப்பு என்னும் கையால் - தாய்மரபு தந்தைமரபு ஆகிய இரு கைகளினால்; கோலப் பாசம் கொளுத்தி - செயற்கை அழகாகிய கடைகயிற்றை அம் மத்திலே பூட்டி; இன்காமம் பொங்கக் கலக்கி - இனிய காமம் என்னும் கடல் பொங்கு
|
|
|
1. கைம்மிகல் - ஒழுக்கக் கேடு. அது சாதித் தருமத்தை நீங்கினமை தன் உள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல் (தொல். மெய்ப். 12. பேர்.) இங்கு வரும் மெய்ப்பாடெல்லாம் தொல். மெய்ப். 12 -13-இல் கூறப்பட்டவை.
|
|