காந்தருவ தத்தையார் இலம்பகம் |
414 |
|
மாறு கலக்கி; கடைந்திடுகின்ற காளை - கடைகின்ற இக்காளையினது; இலைப் பொலி அலங்கல் மார்பம் - இலைகாளற் பொலிவுற்ற மாலையணிந்த மார்பினை; இயைவது என்று ஆகும் கொல்லோ - அடைவதாகிய நல்வினை எந்நாளிலே உண்டாவதோ?
|
|
(வி - ம்.) 'என்றாகும்' என்பது 1.விரைவு என்னும் மெய்ப்பாடு. நலம் மத்து, வலிமையும் இளமையும் இருபக்கத்தும் பூட்டும் கயிறு, தாய் மரபு, தந்தை மரபு என்னும் இருகுலப்பிறப்பும் கைகள், செயற்கை அழகு கடைகயிறு, காமம் கடல் என்க.
|
( 219 ) |
712 |
தீங்கரும் பெருத்திற் றூங்கி யீயின்றி யிருந்த தீந்தே |
|
னாங்கணாற் பருகி யிட்டு நலனுணப் பட்ட நம்பி |
|
பூங்குழன் மகளிர் முன்னர்ப் புலம்பனீ நெஞ்சே என்றாள் |
|
வீங்கிய காமம் வென்றார் விளைத்தவின் பத்தோ டொப்பாள். |
|
(இ - ள்.) தீ கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீ தேன் - இனிய கரும்பின் பிடரிலே தூங்கி (இதுவரை) ஈ தொடாமல் இருந்த இனிய தேனாவான்; நாம் கண்ணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி - நாம் கண்ணினால் நலத்தை உள்ளடக்கி நுகரப்பட்ட இந்நம்பி; பூங்குழல் மகளிர் முன்னர் - பூவணிந்த குழலையுடைய மகளிரின் முன்னால்; நெஞ்சே! நீ புலம்பல் என்றாள் - உள்ளமே! நீ வருந்தாதே என்றாள்; வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள் - மிகுந்த காமத்தை வென்ற பெரியயோர்கள் கண்ட துறக்க இன்பத்துக்கு ஒப்பாவாளான தத்தை.
|
|
(வி - ம்.) ஒப்பாள், 'நெஞ்சே! நம்பி ஈ யின்றி யிருந்த தீந்தேன் நீ புலம்பல்' என்றாள் - என வினை முடிவு செய்க.
|
|
'கரும்பெருத்தில் தூங்கி' என எளிமை கூறினாள். 'ஈயின்றி யிருந்த தீந்தேன்' என்றாள், இதுவரை இவனைப் பிற மங்கையர் நுகராதிருந்த பிரமசரியம் கருதி. 'புலம்பல்' என்பது 2.'சிதைவு பிறர்க்கின்மை' என்னும் மெய்ப்பாடு.
|
( 220 ) |
713 |
கண்ணெனும் வலையி னுள்ளான் |
|
கையகப் பட்டி ருந்தான் |
|
பெண்ணெனு முழலை பாயும் |
|
பெருவனப் புடைய நம்பி |
|
|
1. விரைவு: இயற்கை வகையான் அன்றி ஒரு பொருட்கண் விரைவுத் தொழில்பட உள்ளம் நிகழும் கருத்து.
|
|
2. சிதைவு பிறர்க்கின்மை: நகுநயம் மறைத்த வழியும் உள்ளம் சிதைந்து நிறையழியும் ஆகலின், அச் சிதைவு பிறர்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தல்.
|
|