பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 418 

   (வி - ம்.) பொல்லாங்கு பலவற்றையும் சாதி யொருமையால் 'இது' என்றான். நரம்பின் இசையாற் பிறந்த பொல்லாமையாவன : ” 1.செம்பகை ஆர்ப்புக் கூடம் அதிர்வு” ”செம்பகை என்பது பண்ணோ டுளரா - இன்பமில் ஓசை என்மனார் புலவர்” ”ஆர்ப்பெனப் படுவது அளவிறந் திசைக்கும்” ”கூடம் என்பது குறியுற விளம்பின் - வாய்வதின் வாராது மழுங்கி இசைப் பதுவே” ”அதிர்வு எனப்படுவது இழுமெனல் இன்றிச் சிதறி யுரைக்குநர் உச்சரிப் பிசையே” என்பன. இவை மரக்குற்றத்தாற் பிறக்கும்; ”நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நிலமயக்குப் - பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப் பாற்படல்கோள் - நேரிலே செம்பகை ஆர்ப்பொடு கூடம் அதிர்வுநிற்றல் - சேரினேர் பண்கள் நிறமயக் கப்படும் சிற்றிடையே.” இதனால் மரக்குற்றங்கள் இவை எனவும் அவையே பண்கள் மயங்குவதற்குக் காரணங்கள் எனவும் அறிக.

( 225 )
718 நீர்நின் றிளகிற் றிதுவேண்டா
  நீரின் வந்த திதுபோக
வார்நின் றிளகு முலையினாய்
  வாட்புண் ணுற்ற திதுநடக்க

1. அடியார்க்கு நல்லாருரையிற் காண்க. (சிலப். அ : 29-30)

 

வேறு

 
717 சுரந்து வானஞ் சூன்முதிர்ந்து
  மெய்ந்நொந் தீன்ற துளியேபோற்
பரந்த கேள்வித் துறைபோய
  பைந்தார் மார்பன் பசும்பொன்யாழ்
நரம்பு தேனார்த் தெனத்தீண்டி
  நல்லாள் வீணை பொல்லாமை
யிருந்த முலையா ணின்றாளை
  நோக்கி யிசையி னிதுசொன்னான்.

   (இ - ள்.) வானம் சூல்முற்றி மெய்ந்நொந்து சுரந்து ஈன்ற துளியேபோல் - முகில் சூல் முதிர்ந்து உடல் வருந்திச் சுரந்து பெய்த மழை எங்குஞ் சென்று பயன்பட்டாற் போல; பரந்த கேள்வித்துறை போய பைந்தார் மார்பன் - பரவிய எல்லாக் கேள்வித்துறையினுஞ் சென்று முற்றக் கற்றுப் பயன்படும் புதிய மாலை மார்பன்; பசும்பொன் யாழ் நரம்பு - பைம் பொன்னாலான யாழின் நரம்பை; தேன் ஆர்த்து எனத் தீண்டி - வண்டுமுரல்வது போலத் தெறித்து; நல்லாள் வீணை பொல்லாமை - தத்தையின் யாழிலே குற்றமுடைமையை; இருந்த முலையாள் நின்றாளை நோக்கி - உள்ளடங்கிய முலையுடன் நின்ற வீணைபதியைப் பார்த்து; இசையின் இது சொன்னான் - இசைபோல இது என்று கூறினான்.