| நாமகள் இலம்பகம் |
42 |
|
|
'மிக்க பெயலோடு, பெய லின்மையெலி விட்டில்கிளி, அக்கணர சண்மையோ டாறு' என்பர் பரிமேலழகர்; (திருக்குறள் : 732-பரிமேலழகர்.)
|
( 35 ) |
வேறு
|
|
| 65 |
சேவலன்னந் தாமரையின் தோடவிழ்ந்த செவ்விப்பூக் |
| |
காவிற்கூ டெடுக்கிய கவ்விக்கொண் டிருந்தன |
| |
தாவில்பொன் விளக்கமாத் தண்குயின் முழவமாத் |
| |
தூவிமஞ்ஞை நன்மணம் புகுத்துந்தும்பிக் கொம்பரோ. |
|
|
(இ - ள்.) சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப்பூ - அன்னச் சேவல்கள் இதழ்விரிந்த அழகையுடைய தாமரைப் பூவை ; காவில் கூடு எடுக்கிய கவ்விக்கொண்டிருந்தன- பொழிலிற் கூடு எடுத்தற்பொருட்டுக் கவ்விக்கொண்டிருந்தன; தா இல் பொன்விளக்கம் ஆ - (அவ்வன்னச் சேவல்கள்) குற்றம் இல்லாத விளக்காகவும்; தண்குயில் முழவம் ஆ- தண்ணிய குயிலோசை முழவமாகவும் ; தூவி மஞ்ஞை - பீலியையுடைய மயிலை; தும்பிக் கொம்பர் நன்மணம் புகுத்தும் - வண்டுகளையுடைய மலர்க்கொம்புகள் நன்மணத்தே புகுத்திவிடும்.
|
|
|
(வி - ம்.) எடுக்கிய - எடுத்தற்கு: (எதிர்கால வினையெச்சம்). தா - வலி. தூவி - பீலி. மணம் - பீவின் மணமும் கலியாணமும்.
|
|
|
தாமரையானும் குயிலோசையானும் இளவேனில் என்று கருதி, மயில் பூம்பொதும்பரின் மறைதலின் கொம்பு புகுத்தும் என்றார்; பேடும் தோகை மயிலும் சேரஇருந்தன (மணம் புகுத்தற்கு) என்றார்.
|
|
|
இனி, மயில் அன்னம் விளக்காகக் குயில் முழவமாகத் தும்பியைக் கொம்பிடத்தே மணம் புகுத்தும் என்றுமாம். கொம்பி லுலாவுமயில், விளக்காலும் முழவாலும் அக்கொம்பினின்றும் போந்து ஆடுதலின், அக் கொம்பிற் பூவின் மணத்தே தும்பியைப் புகுதவிட்டதாயிற்று. மெல்லிய ஓசையன்மையின் குயிலோசையை முழவமாகக் கருதிற்று. இதற்கு இக்கருத்து நிகழ்தல் 'ஆடமைக் குயின்ற' (82) என்னும் அகப்பாட்டிற் காண்க.
|
( 36 ) |
| 66 |
கூடினார்க ணம்மலர்க் குவளையங் குழியிடை |
| |
வாடுவள்ளை மேலெலாம் வாளையேறப் பாய்வன |
| |
பாடுசால் கயிற்றிற்பாய்ந்து பல்கலன் ஒலிப்பப்போந் |
| |
தாடுகூத்தி யாடல்போன்ற நாரைகாண்ப வொத்தவே. |
|
|
(இ - ள்.) கூடினார்கண் அம்குவளை மலர்அம் குழியிடை - தம் கணவருடன் கூடின மகளிரின் கண்போன்ற அழகிய குவளை மலரையுடைய அழகிய ஓடையில்; வாடு வள்ளை மேலெலாம் வாளை ஏறப் பாய்வன - (நீர் குறைதலின்) சிறிது வாடின வள்ளையின் மேலே செல்ல வாளை மீன்களெல்லாம் பாய்கின்றவை; பாடு சால் கயிற்றிற் பாய்ந்து பல்கலன் ஒலிப்பப் போந்து ஆடு கூத்தி
|
|