பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 421 

721 தேங்கம ழோதி தோற்றாள்
  செல்வனுக் கென்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள்
  வார்புரி நரம்பு கொண்டான்.

   (இ - ள்.) தீந்தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதி - இனிய நரம்பின் தீமையைச் சிறிதன்றிப் பெரும்போது ஆராய்ந்து கூறி; பூந் தொடை அரிவை காணப்புரி நெகிழ்த்து உரோமம் காட்ட - (அதற்குத்தக) பூமாலை அணிந்த தத்தை காணுமாறு நரம்பின் முறுக்கைத் தளர்த்தி அதிற்கிடந்த மயிரைக் காட்ட; தேன் கமழ் ஓதி செல்வனுக்குத் தோற்றாள் என்ன - அவையிலுள்ளோர் தேன் மணக்குங் கூந்தலாள் சீவகனுக்குத் தோற்றாள் என்றுரைக்க; மைந்தன் வார்புரி நரம்பு நபுலன் கையுள் வாங்குபு கொண்டான் - சீவகன் நீண்ட முறுக்குற்ற நரம்பொன்றை நபுலன் கையிலிருந்து பெற்று யாழில் அமைத்துக் கொண்டான்.

 

   (வி - ம்.) யாழ் நன்றாதலின் தனக்குச் சேமமாக வந்தவற்றில் நரம்பை மட்டும் கொண்டான். கந்துகன் படை அமைத்தெழுமின் என்றதனாற் பதுமுகனும் நந்தட்டனும் மற்றோரும் போர்க்கோலத்தொடு புறத்தே நின்றனர் என்பது தோன்ற, 'நபுலன் கையில் நரம்பிருந்தது' என்றார். மேல், 'பண்ணியல் யானைமேலான் பதுமுகன்' என வருவதனால் உணர்க. 'கொடும்புரி மயிர்தும்பு முறுக்கிவை நான்கும் - நடுங்கா மரபிற் பகையென மொழிப' என்றார்.

( 229 )
722 பணிவரும் பைம்பொற் பத்தர்
  பல்வினைப் பவள வாணி
மணிகடை மருப்பின் வாளார்
  மாடக வயிரத் தீந்தே
னணிபெற வொழுகி யன்ன
  வமிழ்துறழ் நரம்பி னல்யாழ்
கணிபுகழ் காளை கொண்டு
  கடலகம் வளைக்க லுற்றான்.

   (இ - ள்.) பணி வரும் பைம் பொன் பத்தர் - வாசிப்புத் தொழிலிலே வரும் புதிய பொன்னாலான பத்தரையும்; பல்வினைப் பவள ஆணி - பல தொழிற்பாடுற்ற பவளத்தாலாகிய ஆணியையும்; மணி மருப்பின் கடை வாளார் வயிர மாடகம் - முத்தையுடைய யானைத் தந்தத்தாலே கடையப்பெற்ற ஒளிமிகும் வயிர மாடகத்தையும்; தீ தேன் அணி பெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் - இனிய தேன் அழகுற ஒழுகினாற்