| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
422 |
|
|
போன்ற அமுதத்தை வென்ற நரம்பையும் உடைய; நல்யாழ் - அழகிய யாழை; கணி புகழ் காளை கொண்டு - நூல்வலான் புகழுங் காளையாகிய சீவகன் ஏந்தி; கடலகம் வளைக்கல் உற்றான் - கடல் சூழ்ந்த உலகினைத் தன் இசையாலே வசப்படுத்தத் தொடங்கினான்.
|
|
|
(வி - ம்.) பத்தர் - யாழின் ஓருறுப்பு. வயிர மாடகம் : நால்விரலளவான பாலிகை வடிவாய் நரம்பை வலித்தல் மெலித்தல் செய்யும் கருவி. ”இடக்கை நல்விரல் மாடகம் தழீஇ” (சிலப். 8 - 28) என்றார் பிறரும். பொன் முதலியன அழகிற்கு இட்டன.
|
( 230 ) |
| 723 |
குரல்குர லாகப் பண்ணிக் |
| |
கோதைதாழ் குஞ்சி யான்றன் |
| |
விரல்கவர்ந் தெடுத்த கீத |
| |
மிடறெனத் தெரித றேற்றார் |
| |
சுரரொடு மக்கள் வீழ்ந்தார் |
| |
சோர்ந்தன 1புள்ளு மாவு |
| |
முருகின மரமுங் கல்லு |
| |
மோர்த்தெழீஇப் பாடு கின்றான். |
|
|
(இ - ள்.) கோதைதாழ் குஞ்சியான் - பூமாலை தங்கிய சிகையினான்; குரல் குரலாகப் பண்ணி - செம்பாலையைப் பண்ணி; தன் விரல் கவர்ந்து எடுத்த கீதம் - தன் விரலாலே தடவியெழுப்பிய இசையை; மிடறு என - மிடற்றுப் பாடல் என்று கருதி; தெரிதல் தேற்றார் - கருவிப் பாடலெனத் தெளியாதவராய்; சுரரொடு மக்கள் வீழ்ந்தார் - வானவரும் மக்களும் தம்முள் வேறுபாடின்றி நிலத்தே மயங்கி வீழ்ந்தனர்; புள்ளும் மாவும் சோர்ந்தன - கின்னரப் பறவைகளும் அசுண விலங்குகளும் சோர்வுற்றன; மரமும் கல்லும் உருகின - மரங்களும் கற்களும் உருகின; ஓர்த்து எழீஇப் பாடுகின்றான் - அங்ஙனம் யாழிசைத்த நிலையைக் கருத்திற் கொண்டு, அதற்கேற்ப ஆலாபனஞ் செய்து பாடுகின்றான்.
|
|
|
(வி - ம்.) ”ஆழியும் ஆரும் போற்கீறி அதனருகே - ஊழி ஒரோவொன் றுடன் கீறி - வாழி - எருதாதி கீழ்த்திசைகொண் டீராறும் எண்ணிக் - கருதாய் நிலக்கயிற்றைக் கண்டு” (சினேந்திர. காண்ட, ஆருடச் சக்கரம் - 1. இப் பாலைத்திரிவிலே பத்தொன்பது நரம்பையுடைய மகர யாழ் குரல் குரலாமாறு காண்க.
|
( 231 ) |
|
|
1. பறவைகளிற் கின்னரமும் விலங்குகளில் அசுணமுமே இசையறிவிற் சிறந்தன. சிலர் அசுணத்தைப் பறவை யென்பர்.
|
|