| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
423  | 
  | 
வேறு
 | 
  | 
|  724 | 
கன்னி நாகங் கலங்க மலங்கி |  
|   | 
மின்னு மிரங்கு மழையென் கோயான் |  
|   | 
மின்னு மழையின் மெலியு மரிவை |  
|   | 
பொன்னாண் பொருத முலையென் கோயான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கன்னி நாகம் மலங்கிக் கலங்க மழை மின்னும் இரங்கும் என்கோ யான் - கன்னியாகிய நாகம் நிலைகெட்டுக் கலங்க முகில் மின்னும் இடிக்கும் என்று நான் கூறுவேனோ?; மின்னும் மழையின் பொன்நாண் பொருத முலை அரிவை மெலியும் என்கோ யான் - மின்னுகின்ற அம் மழையினால் பொன்னாண் தாக்கும் முலையினையுடைய இவள் மெலிவாள் என்பேனோ நான்? 
 | 
  | 
| 
    (வி - ம்.) இது முதல் மூன்று செய்யுட்களும் கூதிர்ப் பருவங்குறித்துப் பிரியக் கருதிய தலைவற்குத் தோழி, அதற்கு முன் நிகழ்கின்ற காரின் தன்மையும் அது தலைவியை வருத்துந் தன்மையும் 'யான் கூற வேண்டுமோ? நீயே அறிதியன்றோ?' எனக் கூறிச் செலவழுங்குவித்தன வாக்குக. இளவேனில் நிகழ்ச்சிக் கண்ணே கார் கூற வேண்டியதாயிற்று, யாழ்வென்ற பின் அல்லது தன் மனத்தில் வேட்கை தோன்றாதாதலின். அதனைக் கூறவே, வேட்கை தோன்றிற்றாகப் புலப்படுமென்பது கருதி 
 | 
( 232 ) | 
|  725 | 
கருவி வானங் கான்ற புயலி |  
|   | 
னருவி யரற்று மலையென் கோயா |  
|   | 
னருவி யரற்று மலைகண் டழுங்கு |  
|   | 
மருவார் சாயன் மனமென் கோயான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கருவி வானம் கான்ற புயலின் - மின் முதலிய தொகுதியுடைய முகில் பெய்த மழைநீரினால்; மலை அருவி அரற்றும் என்கோ யான் - மலை அருவிகளால் ஒலிக்கும் என்பேனோ நான்?; அருவி அரற்றும் மலைகண்டு மருஆர் சாயல் மனம் அழுங்கும் என்கோ யான் - அருவியால் அரற்றும் மலையைக் கண்டு மருவுதல் பொருந்தி மென்மையாளின் உள்ளம் வருந்தும் என்று சொல்வேனோ நான்? 
 | 
( 233 ) | 
|  726 | 
வான மீனி னரும்பி மலர்ந்து |  
|   | 
கானம் பூத்த காரென் கோயான் |  
|   | 
கானம் பூத்த கார்கண் டழுங்குந் |  
|   | 
தேனார் கோதை பரிந்தென் கோயான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வானம் மீனின் அரும்பி மலர்ந்து - வானத்து மீன்களைப்போல அரும்பி விரிந்து; கார் கானம் பூத்த என் 
 | 
  |