| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
427  | 
  | 
| 
    'மாதர் எருத்தம்' என்பதற்குக் காதலையுடைய எருத்தம் என்றும், 'கிடையிலாள்' என்பதற்குத் தான் சீவகனை ஒத்திலளாய் என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 
 | 
( 239 ) | 
வேறு
 | 
  | 
|  732 | 
இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ் |  
|   | 
சிலையார் திருநுதலுஞ் செம்பசலை மூழ்க |  
|   | 
மலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங் |  
|   | 
கலையார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கலைஆர் தீ சொல்லினாய்! - இசைக்கலை நிறைந்த இனிய மொழியாய்!; இலை ஆர் எரி மணிப்பூண் ஏந்தும் முலையும் - இலை வடிவமாக அமைந்த விளக்கமான மணிக்கலன்களைத் தாங்கிய முலைகளும்; சிலை ஆர் திருநுதலும் செம்பசலை மூழ்க - வில்லைப் போன்ற அழகிய புருவமும் சிவந்த பசலையிலே அழுந்த; மலைஆர் இலங்கு அருவி வாள்போல் மின்னும் - மலையிற் பொருந்தி விளங்கும் அருவி வாள்போல ஒளிரும்; கேள்வர் காணார் கெல்! - இதனை நம் காதலர் காணாரோ? 
 | 
  | 
| 
    (வி - ம்.) இது முதல் மூன்று செய்யுட்களும் தாழிசைக் கொச்சகங்கள்; ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தன. இளவேனில் வருகின்றமை கண்டு ஆற்றாளாகிய தலைவி தோழிக்குரைத் தனவாகக் கூறினாள், வேட்கையும் தத்தைக்குச் சிறிது புலப்பட்டு நிற்றலின். 
 | 
( 240 ) | 
|  733 | 
பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும் |  
|   | 
பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க |  
|   | 
நிறைவா ளிலங்கருவி நீள்வரைமேன் மின்னுங் |  
|   | 
கறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கறைவேல் உண் கண்ணினாய் - குருதிக்கறையுடைய வேலனைய மையுண்ட கண்ணினாய்!; பிறை ஆர் திருநுதலும் - பிறை அனைய அழகிய நெற்றியும்; பேர் அமர் உண் கண்ணும் - பெரிய மதர்த்த கண்களும்; பொறை ஆர் வனமுலையும் - சுமையாகப் பொருந்திய அழகிய முலைகளும்; பசலை மூழக - அழகிய பசலையிலே முழுகுமாறு; நிறைவாள் இலங்கு அருவி நீள் வரைமேல் மின்னும் - ஒளி நிறைந்த வாள்போல விளங்கும் அருவி பெரிய மலைமேல் ஒளிரும்; கேள்வர் காணார் கொல் - காதலர் இதனை அறியாரோ? 
 | 
  | 
|  734 | 
அரும்போ் வனமுலையு மாடமைமென் றோளுந் |  
|   | 
திருந்தோ் பிறைநுதலுஞ் செம்பசலை மூழ்க |  
|   | 
நெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னுங் |  
|   | 
கரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். | 
 
 
 |