| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
430 |
|
| 737 |
மெல்லென் சிலம்பரற்ற மேகலைகண் மின்னுமிழ |
| |
நல்ல பெடையன்ன நாண வடியொதுங்கி |
| |
யொல்லெ னுயர்தவமே செய்ம்மி னுலகத்தீ |
| |
ரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்த்தனளே. |
|
|
(இ - ள்.) மெல் என் சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ - சிலம்புகள் மெல்லென ஒலிக்கவும், மேகலைகள் ஒளி வீசவும்; நல்ல பெடை அன்னம் நாண - அழகிய பெண்ணன்னம் வெள்க; அடி ஒதுங்கி - அடியால் நடந்து சென்று; உலகத்தீர்! எல்லீரும் ஒல் என உயர் தவமே செய்மின்! - உலகத்தவர்களே! நீவிர் யாவரும் ஒல்லென்னும் ஆரவாரப் புகழ்ச்சியுடைய உயர்ந்த தவத்தையே செய்யுங்கள்; என்பாள்போல் - என்று கூறுவாளைப் போல; ஏந்தல் மேல் வீழ்த்தனள் - சீவகன்மேல் அம் மாலையை விழுத்தினள்.
|
|
|
(வி - ம்.) முற்செய்யுளிற் 'குன்று என்றதற்கேற்ப 'வீழ்த்தனள்' என்றார். இங்ஙனம் எய்துதற்குத் தவஞ் செய்யுங் கருத்து எல்லோருக்கும் இவள் பிறப்பித்தலின், 'என்பாள் போல' என்றார். ஒல்லென - வெளியாக என்றுமாம்.
|
( 245 ) |
வேறு
|
|
| 738 |
நாகத்துப் படங்கொ ளல்கு |
| |
னலங்கிளர் செம்பொன் மாலை |
| |
மேகத்துப் பிறந்தோர் மின்னு |
| |
மணிவரை வீழ்ந்த தேபோ |
| |
லாகத்துப் பூட்டி மைந்த |
| |
னடிதொழு திறைஞ்சி நின்றாள் |
| |
போகத்து நெறியைக் காட்டும் |
| |
பூமகள் புணர்ந்த தொப்பாள். |
|
|
(இ - ள்.) போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள் - இன்ப நெறியைக் காட்டுந் திருமகள் வந்து கூடியது போன்றாள்; நாகத்துப் படம்கொள் அல்குல் - நாகத்தின் படம் போன்ற அல்குலாள்; மேகத்துப் பிறந்த ஓர் மின்னு மணிவரை வீழந்ததே போல் - மேகத்திடையே பிறந்த ஒரு மின்னுக்கொடி மணிவரையிலே வீழ்ந்ததுபோல; செம்பொன் மாலை மைந்தன் ஆகத்துப் பூட்டி - செம்பொன் மாலையைக் சீவகன் மார்பிலே அணிந்து, அடி தொழுது இறைஞ்சி நின்றாள் - அவன் அடியிலே தாழ்ந்து வணங்கி நின்றாள்.
|
|
|
மாலை அவனது முடிகூடாத கருநெறி பயின்ற குஞ்சி கழுத்தின் மேல் அலைந்து கிடக்க, அதன்மேல் முதலில் வீழ்ந்து, பின்பு, கழுத்
|
|