| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
431 |
|
|
திலே விழுந்தமை தோன்ற மேகம் உவமை கூறினார். வீழ்வது பாடமாயின் காலமயக்கம்
|
|
| 739 |
செம்மல ரடியு நோக்கித் |
| |
திருமணி யல்கு னோக்கி |
| |
வெம்முலைத் தடமு நோக்கி |
| |
விரிமதி முகமு நோக்கி |
| |
விம்மிதப் பட்டு மாதோ |
| |
விழுங்குவான் போல வாகி |
| |
மைம்மலர்த் தடங்க ணங்கை |
| |
மரைமலர்த் தேவி என்றான். |
|
|
(இ - ள்.) செம்மலர் அடியும் நோக்கி - சிவந்த மலரனைய அடிகளையும் பார்த்து; அல்குல் திருமணி நோக்கி - அல்குலின் மேல் அழகிய மேகலை மணியையும் பார்த்து; வெம்முலைத் தடமும் நோக்கி - விருப்பமூட்டும் முலைகளையும் பார்த்து; விரிமதி முகமும் நோக்கி - முழுமதியனைய முகத்தையும் பார்த்து; விம்மிதப்பட்டு, விழுங்குவான் போல ஆகி - வியப்புற்று அவளை விழுங்குவான்போலப் பார்த்தவனாகி; மைம்மலர்த் தடங்கண் நங்கை - மையுண்ட மலரனைய பெருங்கண்களையுடைய இவள்; மரை மலர்த் தேவி என்றான் - தாமரை மலரில் திருவே என்று கருதினான்.
|
|
|
(வி - ம்.) அடி நிலந் தீண்டியும், ஆடை மாசேறியும், மாலை வாடியும், கண் இமைத்தும் இருக்கக் கண்டு ஐயம் நீங்கினான். விம்மிதம் - வியப்பு; அஃதாவது பிறர்கண் தோன்றிய புதுமையாற் பிறந்த மருட்கை யென்னும் மெய்ப்பாடு. இது தனக்கே பான்மையாயினமையின் தன் கண் மறைந்து நின்ற வேட்கை புலப்பட்டு மனத்தினையும் கண்ணினையும் அடிதொட்டு முடிகாறுஞ் செலுத்தினமை கூறிற்று. இவன் இவ்வாறு கருதி வீணை யொழிந்து அயர்தலாகிய கையாறுற்றிருந்தமை, மேலே, 'தார்ப்பொலி மார்பன் ஓர்த்து' (சீவக. 758) என்றதனானுணர்க.
|
( 247 ) |
| 740 |
கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீச |
| |
மாதரம் பாவை நாணி மழைமினி னொசிந்து நிற்பக் |
| |
காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை |
| |
யேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார். |
|
|
(இ - ள்.) கோதையும் தோடும் மின்ன - மலர் மாலையும் தோடும் ஒளிரவும்; குண்டலம் திருவில் வீச - குண்டலம் வானவில் லொளியைப் பொழியவும்; மாதர் அம் பாவை நாணி - காதலூட்டும் அழகிய பாவை போல்வாள் நாணமுற்று; மழை மினின் ஒசிந்து நிற்ப - முகிலிடை மின்போல நுடங்கி நிற்பக்
|
|