பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 432 

(கண்டு); ஏதம் ஒன்று இன்றி - நாணத்தால் வருங் குற்ற மெதுவும் இல்லாமல், காதல் அம் தோழிமார்கள் - அன்புறுதோழியர்; பூம்பட்டு எந்திர எழினி வீழ்த்தார் - பூம்பட்டாலாகிய பொறித்திரையை விடுத்தனர்.

 

   (வி - ம்.) தோட்டின் ஒளி கோதையிலே எறிப்ப நிற்றலின், 'கோதையும் தோடும் மின்ன' என்றார். கண்ணினாளை: உருபு மயக்கம்.

( 248 )
741 வெள்ளிலை வேற்க ணாளைச்
  சீவகன் வீணை வென்றா
னொள்ளிய னென்று மாந்த
  ருவாக்கடல் மெலிய வார்ப்பக்
கள்ளராற் புலியை யேறு
  காணிய காவன் மன்ன
னுள்ளகம் புழுங்கி மாதோ
  வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம்.

   (இ - ள்.) வெள் இலை வேல்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் - வெற்றிலை போலும் முக வேலனைய கண்ணாளைச் சீவகன் வீணையாலே வென்றான்; ஒள்ளியன் என்று - சிறப்புடையன் என்றுரைத்து; உவாக்கடல் மெலிய மாந்தர் ஆர்ப்ப - நிறை உவா நாளிற் கடலும் தோல்வியுற மக்களெல்லாரும் ஆரவாரிக்க; காவல் மன்னன் உள்ளகம் புழுங்கி - உலகங் காக்குங்கட்டியங்காரன் மனம் புழுங்கி; கள்ளரால் புலியை ஏறு காணிய - கள்ளர்களாற் புலியை எறிதல் காண வேண்டி; மன்னர்க்கெல்லாம் உரைத்தனன் - வேந்தர்க ளெல்லோரையும் பார்த்து விளம்பினன்.

 

   (வி - ம்.) ஒள்ளியன்: திசைச்சொல். காவல் மன்னன்: இகழ்ச்சி. 'கள்ளர வா புலியைக் குத்து' என்பது பழமொழி. தன்னால் வெல்ல வியலாத சீவகனைத் தன் பழம்பகையான மன்னர்களைக் கொண்டு வெல்லக் கருதினான் என்பது கருத்து. 'வேறு காணிய' என்றும் பாடம்.

( 249 )
742 வடதிசைக் குன்ற மன்ன
  வான்குல மாசு செய்தீர்
விடுகதிர்ப் பருதி முன்னர்
  மின்மினி விளக்க மொத்தீர்
வடுவுரை யென்று மாயும்
  வாளமர் அஞ்சி னீரேன்
முடிதுறந் தளியிர் போகி
  முனிவனம் புகுமி னென்றான்.