| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
434 |
|
|
(வி - ம்.) நீர் போருக் கஞ்சிக் கலுழ வேகன் மகளைக் கொடுத்தலின், யான் நினைத்த அளவாய் என்கீழ் வாழ்வானை எனக்கு நிலை குலைத்தல் அரிதாக்கினீர் என்றான்.
|
|
|
முல்லைப் பூப்பந்தென்றான் இப்பொழுதே அவனை வெல்லுதல் எளிது என்பது தோன்ற. 'மல்லுப்பூத்தகன்ற மார்பீர்' என்றான், நும் வலிமையையும் நீயிர் இப்போது நினைந்து கொண்மின் என்பது தோன்ற. இதனால் அரசருடைய சினத்தைத் தூண்டுகின்றான்.
|
( 251 ) |
| 744 |
திருமக ளிவளைச் சோ்ந்தான் றெண்டிரை யாடை வேலி |
| |
யிருநில மகட்குஞ் செம்பொ னேமிக்கு மிறைவ னாகுஞ் |
| |
செருநிலத் திவனை வென்றீர் திருவினுக் குரியீ ரென்றான் |
| |
கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங் கார னன்றே. |
|
|
(இ - ள்.) கருமனம் நஞ்சு வெஞ்சொல் கட்டியங்காரன் - கொடிய மனத்தினையும் நஞ்சு கலந்த கொடிய சொல்லையும் உடைய கட்டியங்காரன்; திருமகள் இவளைச் சேர்ந்தான் - திருமகளாகிய இவளை அடைந்தவன்; தெண் திரை ஆடை வேலி இருநில மகட்கும் செம்பொன் நேமிக்கும் - தௌ்ளிய அலைகடலை ஆடையாகவும் வேலியாகவும் உடைய பெருநில மகளுக்கும் செம்பொன் கொண்ட சக்கரவாளகிரிக்கும்; இறைவன் ஆகும் - அரசன் ஆவான்; செருநிலத்து இவனை வென்றீர் - (ஆகையால்) போர்க்களத்தே இவனை வென்றீரெனின்; திருவினுக்கு உரியீர் என்றான் - (முதற்கூறிய) செல்வத்துக்கு உரியீராவீர் என்றான்.
|
|
|
(வி - ம்.) நல்லிலக்கணமுழுதும் அமைந்த இவளை எய்தினோர் எல்லாச் செல்வமும் எய்துதல் ஒருதலை என்பான், ”திருமகள் இவளைச் சேர்ந்தான் நிலமகட்கும் நேமிக்கும் இறைவன் ஆகும்” என்றான். நேமி. சக்கரவாளகிரி; என்றது தேவருலகிற்கும் என்றவாறு. இதனால் அரசருடைய ஆசையைத் தூண்டுகின்றான்.
|
( 252 ) |
| 745 |
அனிச்சப்பூங் கோதை சூட்டி |
| |
னம்மனை யோவென் றஞ்சிப் |
| |
பனிக்குநுண் ணுசுப்பிற் பாவை |
| |
யொருத்திநாம் பலரென் றெண்ணித் |
| |
துனித்துநீர் துளங்கல் வேண்டா |
| |
தூமணிச் சிவிறி நீர்தூய்த் |
| |
தனிக்கயத் துழக்கி வென்றீர் |
| |
தையலைச் சார்மின் என்றான். |
|
|
(இ - ள்.) அனிச்சப் பூங்கோதை சூட்டின் - அனிச்ச மலர்மாலையைச் சூட்டினும்; அம்மனையோ! என்று அஞ்சிப் பனிக்கும் - அம்மாவோ! என்று அச்சமுற்று நடுங்கும்; நுண்
|
|