| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
435 |
|
|
நுசுப்பின் பாவை ஒருத்தி - நுண்ணிடைப் பாவையாள் ஒருத்தியே; நாம் பலர் என்று எண்ணி - நாமோ பலருளோம் (எனவே நம்மிற் போர் செய்ய வேண்டுமோ) என்று நினைத்து; நீர் துனித்துத் துளங்கல் வேண்டா - நீர் வெறுத்து மனங்கலங்க வேண்டா; தூமணிச் சிவிறி நீர் தூய் - தூய மணித்துருத்தியினாலே நீரைத் தூவி; தனிக் கயத்து உழக்கி வென்றீர் - தனியே குளத்திலே பொருது வென்றீர்கள்; தையலைச் சார்மின் என்றான் - தத்தையை அடைவீர் என்றான்.
|
|
|
(வி - ம்.) துணியலாகாமையிற் பன்மையாற் கூறினான்.
|
|
|
இதன்கண் தத்தையின் எழிலை விதந்தோதி அரசர்தம் காமக்குணத்தைத் தூண்டுதல் உணர்க.
|
( 253 ) |
| 746 |
வெந்திற லாளன் கூற |
| |
வேகமோ டுரறி மன்னர் |
| |
பந்தணி விரலி னாடன் |
| |
படாமுலைப் போகம் வேண்டிக் |
| |
கந்தெனத் திரண்ட திண்டோட் |
| |
கந்துகன் சிறுவன் காயு |
| |
மைந்தலை யரவின் சீற்றத் |
| |
தாரழல் குளிக்க லுற்றார். |
|
|
(இ - ள்.) வெந்திற லாளன் கூற - கொடியவன் இவ்வாறு கூற; பந்து அணி விரலினாள் தன் படாமுலைப் போகம் வேண்டி - பந்து பயிலும் விரலினாளின் சாயாத முலைகளின் இன்பத்தை விரும்பி; மன்னர் வேகமொடு உரறி - அரசர்கள் சினங்கொண்டு முழங்கி; கந்து எனத் திரண்ட திண்தோள் - தூணெனத் திரண்ட திண்ணிய தோள்களையுடைய; கந்துகன் சிறுவன் - சீவகன் ஆகிய; காயும் - சினந்த; ஐந்தலை அரவின் சீற்றத்து ஆரழல் குளிக்கல் உற்றார் - ஐந்தலைப் பாம்பின் சீற்றமாகிய பெரு நஞ்சிலே முழுகத் தொடங்கினர்.
|
|
|
(வி - ம்.) தானும் நந்தட்டனும் ஒரு தலையும், பதுமுகன் ஒழிந்த தோழர்கள் மூவரும் மூன்று தலையும், நபுலனும் விபுலனும் ஒருதலையுமாகப் படைவகுத்தெழுதலின், 'ஐந்தலையரவு' என்றார். அது, 'சதுமுகமாகச் சேனை நமர்தலைப் பெய்க' (சீவக. 766) என்பதனானுணர்க.
|
( 254 ) |
| 747 |
பண்ணியல் யானை மேலான் |
| |
 பதுமுகன் பரவைத் தானே |
| |
கண்ணிய துணர்ந்து கல்லாக் |
| |
 கட்டியங் கார னெஞ்சி |
|